PUBLISHED ON : நவ 23, 2024 12:00 AM

நடிகர் சூரி, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டியில், 'எனக்கு காமெடியனாகவும், ஹீரோவாகவும் வாய்ப்பு கொடுத்ததுமக்கள்தான். சூர்யா நடித்த, கங்குவா திரைப்படம் அருமையாக உள்ளது. நன்றாக இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்குகொண்டு செல்வதற்கான படமாகத்தான் அதை பார்க்கிறேன்' என்றார்.
அப்போது, சூரியிடம் சிறுவன் ஒருவன், 'நீங்கள் நடித்த, டான் திரைப்படத்தை பலமுறை பார்த்தேன்' என்றான். அதற்கு சூரி, 'படத்தை மட்டும் பலமுறை பார்த்தால் போதாது. பாடத்தையும் பலமுறை படிக்க வேண்டும். தாய், தந்தை சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்' என்றபடியே கிளம்பினார்.
அங்கிருந்த முதியவர் ஒருவர், 'படம் சோறு போடாது... படிப்புதான் தம்பி சோறு போடும்... போய் நல்லா படிப்பா...' என, அறிவுரை கூறி, சிறுவனை அனுப்பி வைத்தார்.

