PUBLISHED ON : ஆக 27, 2026 12:00 AM

திருப்பூர், ஸ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில், 16வது ஆண்டு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, திருப்பூர், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
'ஆண்டாள் அருளிய நாராயணன் நாமம்' எனும் தலைப்பில், திருச்சி கல்யாணராமன் பேசுகையில், 'முன் பெல்லாம் போன் இருக்குமிடத்திற்கு சென்று பேசினோம்; இப்ப, போன் வந்தால் எடுத்துட்டு ரோட்டுக்கு போகிறோம்... கேட்டா, 'டவர்' கிடைக்கலைன்னு சொல்றோம்.
'மொபைல் போன் வந்தது; சிட்டுக்குருவி இல்லை; இப்ப, காக்கையும் இல்ல. முன்னோருக்கு திதி கொடுத்துட்டு, சாப்பாடு கொடுக்க காக்கையை கூப்பிட்டால், முன்பெல்லாம் வரும்; இப்ப காக்கையே வர்றது இல்லை' என்றார்.
முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர், 'வாஸ்தவம் தான்... மொபைல் போனால கிடைச்ச லாபங்களை விட, நஷ்டங்களே அதிகம்' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
