PUBLISHED ON : ஆக 26, 2026 12:00 AM

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சமீபத்தில் திருப்பத்துார் வந்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், 'விரைவில் முதல்வர் விஜயை சந்திக்க உள்ளோம். அப்போது, வணிகர்களின் பிரச்னைகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்கொள்வதற்கும், உள்நாட்டு வணிகத்தை பாதுகாப்பதற்கும், அரசு முன் வரவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் கடைகள் காணாமல் போகும் நிலை ஏற்படும்.
'இதனால், 10 லட்சம் குடும்பங்களும், வணிக நிறுவனங்கள் செயல்படும் கட்டடங்களும் பாதிக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் பாதிக்கப்படும். எனவே, வணிகர்கள் பிரச்னைகளை ஆய்வு செய்து, அரசு தீர்வு காண வேண்டும்' என்றார்.
இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இவர் சொல்றதை பார்த்தால், அஞ்சு வருஷ தி.மு.க., ஆட்சியில், வணிகர்களுக்கு எதுவுமே செய்யலைன்னு நல்லாவே தெரியுது' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
