PUBLISHED ON : ஆக 16, 2026 01:46 AM

இந்திய கம்யூ., கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன், சமீபத்தில் திருச்சியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'காவிரி நதிநீர் பிரச்னையில் நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் என எந்த தீர்ப்பையும் மதிக்க மாட்டோம், என்று கர்நாடக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
'தேசியக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி செய்யும், கர்நாடக அரசின் பொறுப்பற்ற பதில் கவலை அளிக்கிறது. காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் அனைத்து கட்சிகளும் ஒரே குரலாக ஒலிப்பதை போல், தமிழகத்திலும் ஒருமித்த கருத்தை உருவாக்க, அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை, தமிழக அரசு கூட்ட வேண்டும்' என்றார்.
இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் போட்டுட்டா மட்டும், கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுருமா என்ன?' என முணு முணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.
