PUBLISHED ON : நவ 14, 2025 12:00 AM

கோவை மாவட்டம், வால்பாறையில் நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. இதில், தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'நானும் உங்களை மாதிரி ஏழை தான். என் தாத்தா, செருப்பு தைச்சிட்டிருந்தாரு. அப்பா துாய்மை பணியாளர். மிகவும் வறுமையில் இருந்த எனக்கு, முதல்வர் ஸ்டாலின் தான், துாய்மை பணியாளர் நல வாரியத் தலைவர் பதவி கொடுத்து, உசரத்தில் கொண்டு விட்டாரு. அதனால், உங்கள் பிரச்னைகளை, முதல்வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன்' என்றார்.
அங்கிருந்த துாய்மை பணியாளர் ஒருவர், 'நாம நம்ம குறைய சொன்னா, அவரு அவரோட கதையை சொல்றாரு. தேர்தல் வருதுல்ல... முதல்வருக்கு ஐஸ் வைச்சு, வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., பதவிக்கு, 'சீட்' கேட்பாரு போலிருக்கு...' என, அருகில் இருந்தவரிடம் முணுமுணுத்தார்.

