sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி: உதயநிதி, துணை முதல்வராக வருவதற்கு வாழ்த்துக்கள்; அதில், கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. அதே நேரம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு துணையாக, முதல்வர் ஸ்டாலினுக்கு துணையாக நிற்கும் மூத்த அமைச்சர்கள் துணையற்ற நிலையில் உள்ளனர் என்பதை தி.மு.க., கவனத்தில் கொள்ள வேண்டும்.உதயநிதி, இன்பநிதி வரைக்கும் அந்த குடும்பத்துக்குதுணையா இருக்கவே, சீனியர் அமைச்சர்களை பக்குவமா தயார்படுத்திட்டாங்களே!

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அலமேடு அரசு நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, அமைச்சர் மதிவேந்தன் வாகனத்தை பெற்றோர் முற்றுகையிட்டது கல்வித்துறையின் நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது. அமைச்சர் காரை விட்டு இறங்காமல், பதில் அளித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.'பள்ளி விவகாரம் என் ஏரியா... நீங்க ஏன் அதுக்கெல்லாம் பதில் சொன்னீங்க'ன்னு அமைச்சர் மகேஷ் திட்டுவார்னு நினைச்சிருப்பாரோ?



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்அறிக்கை: நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், கேரளாவில்இருந்து கொண்டு வரப்படும்மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. சென்னை உயர் நீதிமன்றம்மற்றும் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு

வர வேண்டும்.உழவுக்கு தண்ணீர் கேட்டா தராதவங்க, குப்பைத்தொட்டியா மட்டும் தமிழகத்தைபயன்படுத்துவதை ஒருபோதும் விடக்கூடாது!

புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை பேட்டி: தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன் தான் அதிகரித்து உள்ளது. திருமாவளவன், 'நான் ஏன் முதல்வர் ஆகக்கூடாது?' என்று கேட்கிறார். செல்வப்பெருந்தகை, 'காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம்' என்கிறார். தி.மு.க., கூட்டணி பலம் இழந்து வருகிறது.பா.ஜ., எதிர்ப்பு என்ற ஒரே அச்சாணியில் தான், அந்த கூட்டணி வண்டி ஓடிட்டு இருக்கு தெரியுமா?






      Dinamalar
      Follow us