sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: காவிரியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உச்சத்தை எட்டிய பிறகும், தமிழகத்திற்கான காவிரி நீரை தர மறுப்பது, கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது. இனியும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காக்காமல், கர்நாடக அரசின் சட்டவிரோதப் போக்கை, நீதிமன்றம் வழியே எதிர்கொண்டு, காவிரி நீரை பெறும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

கூட்டணி கட்சியை விட வருண பகவானை முதல்வர் அதிகமா நம்புறார்... எப்படியும் மழை பெய்து அணை நிரம்பினால் உபரிநீரை திறந்து விட்டு தானே ஆகணும்னு வெயிட் பண்றாரோ?

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு, உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பேசிய திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினிடம் சரணடைந்துள்ளார். தமிழக காவல் துறை உண்மை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என, திருமாவளவன் கூறியதால், ஆம்ஸ்ட்ராங் வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தால் தான் உண்மை வெளிவரும்.

இப்படி எல்லாம் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்வீங்கன்னு தான், கொலை குறித்த, 'சிசிடிவி' காட்சிகளை காவல் துறை வெளியிட்டிருக்கோ?

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்து விட்டான் என்று சொல்வது, சாட்டை துரைமுருகன் கைது விவகாரத்தில் உண்மையாகி விட்டது. கருணாநிதி குறித்த பாட்டை, சமூக ஊடகங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பகிர்ந்து வருவதும், பேசி வருவதும், தி.மு.க.,வின் ஆணவத்தால் அக்கட்சிக்கு ஏற்படப்போகும் அழிவின் துவக்கம். தி.மு.க., இனியாவது அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையேல் தி.மு.க., தலைவர்கள் குறித்து, ஈ.வெ.ரா., கண்ணதாசன் போன்றவர்கள் விமர்சித்த பொன்மொழிகள் மீண்டும் புதுப்பொலிவோடு உலா வருவது உறுதி.

எல்லா கட்சியிலும் ஐ.டி., விங்னு ஒன்று இருப்பதே, அடுத்த கட்சி தலைவர்களை விமர்சிக்க தான்னு ஆகிடுச்சு... அதுல, 'வார்னிங்' வேறயா?

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகு ராஜ் அறிக்கை: அ.தி.மு.க., தொண்டர்கள் தி.மு.க.,வுக்கு வர வேண்டும் என, தி.மு.க., வேண்டுகோள் விடுத்துள்ளது. அது சரி... காக்க தெரியாதவன் பொக்கிஷத்தை, ஆசைப்பட்டவன் எல்லாம் ஆளுக்கு இரண்டாக பிரிச்சிக்கிட்ட மாதிரி தான்.

பதவி, பலன் எதிர்பார்க்குறவங்க வேணும்னா தி.மு.க.,வுக்கு போவாங்க... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் போவாங்களா?






      Dinamalar
      Follow us