sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஆக 25, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 25, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர்இளங்கோவன் பேச்சு:ஆக்கிரமிப்பாளர் அ.தி.மு.க.,வை சேர்ந்தவராக இருந்தால் அகற்ற வருகின்றனர். இது போன்ற செயல்களால் அ.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது. யாராக இருந்தாலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என, சேலம் தி.மு.க., - எம்.பி., செல்வகணபதி கூறுகிறார். கஞ்சநாயக்கன்பட்டியில் ஊராட்சி தலைவர் உட்பட பல்வேறு தி.மு.க.,வினர் ஆக்கிரமித்து பல வீடுகளை கட்டியுள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அவரால் அகற்ற முடியுமா?

ஆக்கிரமிப்பா இருந்தா அகற்ற தானே செய்வாங்க... இதுக்கெல்லாம் வரிந்து கட்டினால், அ.தி.மு.க.,வை இவர்களே அழித்து விடுவர் என்று தான் சொல்லணும்!

ஆல் இந்தியா மோட்டார் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜ் பேட்டி: ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளில், ஆற்று மணல் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற ஒப்பந்த நிபந்தனை உள்ளது. அதேபோன்று தமிழக அரசு, 50 சதவீதம் ஆற்று மணலை பயன்படுத்த வேண்டும் என்று அரசாணையை வெளியிட வேண்டும்.

இது, அரசு கட்டடங்கள் தரமா இருக்கணும் என்ற அக்கறையா, இல்ல லாரிகளுக்கு லோடு கிடைக்கணும் என்ற சுயநலமா?

பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பேச்சு: கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை, வீடு, வீடாக கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பது தான் பழனிசாமியின் விருப்பம். இப்பணியை சிறப்பாக செய்தால், நாம் தனித்து போட்டியிட்டால் கூட, ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில்வெற்றி பெற முடியும்.

இப்ப வீடு, வீடாக சென்றுஅட்டையை கொடுத்தாலும்,தேர்தலில் வீடு, வீடா சென்று நோட்டு வினியோகித்தால்தான் வெற்றியை பற்றி நினைத்துப்பார்க்க முடியும்!



முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: அத்திக்கடவு --- அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால், முக்கிய காரணம் ஜெயலலிதா தான். இத்திட்டத்திற்கு காரணம் தி.மு.க., என்ற மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். ஜெயலலிதா திட்டத்தை 1,862 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த அறிக்கை தயார் செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். அவர் உடல் நலம் குன்றி, அந்த ஆண்டு இறுதியில் மறைந்ததால் திட்டம் சற்று தாமதமாக, ஜெயலலிதா வழியில் நடந்த ஆட்சியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

'ஜெ., வழியில் நடந்த பழனிசாமி ஆட்சியில்'னு சொன்னா குடியா முழுகிடும்!






      Dinamalar
      Follow us