sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பேச்சு:தி.மு.க., ஒருமுறை ஆட்சிக்கு வந்தால், மறுமுறை ஆட்சிக்கு வராது என்பதுதான் சரித்திரம். அதே நேரத்தில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தொடர்ந்து ஆட்சியில் இருப்பது தான் வரலாறு. வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறும். தி.மு.க., மீதிருக்கும் எதிர்ப்பு அலை, அ.தி.மு.க.,விற்கு ஆதரவு அலையாக மாறும்.

எம்.ஜி.ஆர்., - ஜெ., தலைமையில் இருந்த அ.தி.மு.க., தான், ரெண்டாவது முறையா ஆட்சியை பிடிச்சிருக்கு... பழனிசாமி அ.தி.மு.க., விட்டதையாவது பிடிக்குதான்னு பார்க்கலாம்!

தமிழக பா.ஜ.,வில் இருக்கும் நடிகர் சரத்குமார்: தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த நவீன காலக்கட்டத்தில், 50 ஆண்டுகள் பின்னோக்கிய சிந்தனையை என்னவென்று சொல்வது? கொரோனா காலத்தில், இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் பள்ளிக்கே சென்று படிக்க முடியாத சூழல் இருந்தும், 'ஆன்லைன்' வகுப்புகள் எடுக்கப்பட்டன. அதுபோன்று, மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்த வாரத்திற்கு, இரண்டு, மூன்று தினங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த, பிறமொழி கற்ற ஆசிரியர்களை நியமித்து வாய்ப்பை உருவாக்கலாம்.

நல்ல ஐடியாதான்... ஆனா, மூன்றாவது மொழி என்ற ஆணியே வேண்டாம் என்பவர்களிடம், எந்த யோசனை சொன்னாலும் எடுபடாது!

தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ் அறிக்கை: கள் உணவுப்பொருள். அதை அருந்துவதால் உடல் நலத்திற்கு கெடுதல் இல்லை. கள் மீதான தடையை நீக்கினால், விவசாயிகள் நேரடியாக பயன் பெறுவர். அரசுக்கும், தற்போது கிடைக்கும் வருமானத்தை விட அதிக வருவாய் கிடைக்கும். மக்களுக்கு மதுவால் ஏற்படும் தீமைகள் ஒழியும். கொலை, கொள்ளை, களவு உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறையும். அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டால் போதைப்பொருள் நடமாட்டத்தைக் குறைக்க முடியும்.

கள்ளுக்கு அனுமதி தந்துட்டா நிறைய மருத்துவமனைகள், போலீஸ் ஸ்டேஷன்களை இழுத்து மூடிடலாம் போலிருக்குதே!

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: அரியலுார் அனிதா மரணத்திற்காக, 'நீட்' விலக்கு வேண்டும் என பேசும் உதயநிதி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, இரண்டாம் ஆண்டு கல்லுாரி மாணவி அஸ்வினி அதிக மது குடித்து இறந்ததற்காக, மதுவிலக்கு குறித்து பேசுவாரா?

அஸ்வினி மரணம் ஒன்று தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கு... கணக்கில் வராத நுாற்றுக் கணக்கான மரணங்கள் தினமும் மதுவால் நடந்துட்டே தான் இருக்குது!






      Dinamalar
      Follow us