sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : செப் 23, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 23, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக, பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

திருச்சி மாவட்டம், துறையூரில் கள்ளச்சந்தையில் அரசு சத்துணவு முட்டைகள், தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. 'என் ஏரியாவில் வந்து பேசிட்டு போயிட்ட; உன்ன சும்மா விட மாட்டேன்' என பொங்கிய அமைச்சர் மகேஷ், தன் ஏரியாவில் வந்து கொள்ளை அடிப்பவர்களை சும்மா விட்டு கொண்டிருக்கிறாரே ஏன்?

'சத்துணவு முட்டை, சமூக நலத்துறை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அந்த ஏரியாவுக்குள்ள நான் போக மாட்டேன்'னு சொல்லிடுவாரே!

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: தமிழக மீனவர்களை இலங்கையில் சுடுகின்றனர்; படகுகளை பறிமுதல் செய்கின்றனர். மீனவர்களுக்கு மொட்டையடித்தது இந்தியாவிற்கே பெரிய அவமானம். பல லட்சம் மக்களை திரட்டி, கட்சி மாநாடு நடத்துகின்றனர். அதற்கு பதிலாக, கச்சத்தீவு உரிமையை மீட்க போராடலாம். அப்படி செய்தால், தி.மு.க., ஆட்சியை, மத்திய அரசு கலைத்து விடும் என, பயப்படுகின்றனர்.

மீனவர்கள், விவசாயிகள் பிரச்னைகளில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுறது மட்டும் தான், தி.மு.க., ஆட்சியின் ஒரே வேலை!



தமிழக, பா.ஜ., பொதுச்செயலர், ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: உலகமே நாடக மேடை தான் என்பதை, தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் நிரூபணம் செய்கின்றன. அதாவது, துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பார் என, அமைச்சர் உதயநிதி கூறுகிறார். இது, உலக மகா நாடகம் என்பது தெரியவில்லையா?

பா.ஜ.,விலும் எல்லாத்துக்கும் பிரதமர் மோடியை தான் கை காட்டுறீங்க... அதுக்காக எல்லாரும் நடிக்கிறீங்கன்னு சொல்லலாமா?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி: தமிழகத்தின் நகர்ப்புற பகுதிகளில், 6 சதவீத சொத்து வரி உயர்த்த நகராட்சி நிர்வாகத் துறை திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த, 2022ல் தான், 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டது. தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சொத்துவரி உயர்த்தப்பட்டால் அது மக்கள் மீது பெரிய சுமையாக அமையும். சொத்து வரியை உயர்த்தினால், பா.ம.க., சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு ஒன்றரை வருஷம் இருப்பதால், கட்டாயம் சொத்து வரியை உயர்த்திடுவாங்க... போராட ஆயத்தமாகிடுங்க!






      Dinamalar
      Follow us