PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM

தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி: பல
விஷயங்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சி.பி.ஐ., விசாரணை
கேட்கிறார். இங்குள்ள காவல் துறை தொய்வாக இருந்தால் சி.பி.ஐ.,
விசாரணை கேட்கலாம். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில், சில மணி
நேரத்தில் தொடர்புடையவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இப்பிரச்னைக்கு
பழனிசாமி சி.பி.ஐ., விசாரணை கேட்பதில் எந்த நியாயமும் இல்லை.
திருச்சி ம.தி.மு.க., - எம்.பி.,துரை வைகோ பேட்டி:மூன்றாவது மொழியாக, எந்த மொழியைப் படிக்க வேண்டும் என்பதை மாணவர்களும், பெற்றோரும்தான் முடிவு செய்ய வேண்டும். பாடத்திட்டத்தில் சர்வதேச மொழிகள் அகற்றப்பட்டுள்ளதால், வேறு வழியின்றி, தமிழக மாணவர்கள் ஹிந்தியை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மூன்றாவது மொழியாக ஹிந்தி திணிப்பை எதிர்க்கிறோம்.
இந்தியாவில், அதிகம் பேசக்கூடியமொழியான ஹிந்தியை மாணவர்கள்கற்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?
கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி பேட்டி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும், அதற்கு எதிராக பலத்த குரலை கொடுக்க வேண்டியது, அனைவரது கடமை. அண்ணா பல்கலையில் பாதுகாப்பு குறைபாடு அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா பல்கலை மட்டுமின்றி, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டணி கட்சி என்பதால், வெறும் அதிர்ச்சியோட முடிச்சுக்கிட்டாங்க... இதே, பா.ஜ., ஆளும் மாநிலமா இருந்தா போர்க்கோலம் பூண்டிருப்பாங்க!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை: பாபநாசம் சட்டசபை தொகுதியின் அம்மாப்பேட்டை யூனியன் கிராமங்கள் தஞ்சாவூர் மாநகராட்சியுடனும், கும்பகோணம் யூனியன் கிராமங்கள், கும்பகோணம் மாநகராட்சியுடனும், பாபநாசம் யூனியன் கிராமம் அய்யம்பேட்டை பேரூராட்சியுடனும் இணைக்கப்படுவதாக அரசாணை வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட கிராம மக்கள், மக்கள் பிரதிநிதிகள் கருத்துக்களை கேட்காமல், இந்த அறிவிப்புகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கிராமங்களை மேம்படுத்தவே நகரங்களுடன் அரசு இணைக்குது... ஆனா, 100 நாள் வேலை உள்ளிட்ட வாழ்வாதாரம் பாதிப்பதால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யணும்!

