PUBLISHED ON : நவ 25, 2026 12:00 AM

பா.ஜ., தமிழக பிரமுகரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: தன்னை நம்பி வந்த அனைவரது அரசியல் வாழ்க்கையையும் பாழ்படுத்தி, நாசப்படுத்தி, அவர்களின் எதிர்காலத்தை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டார், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ.
இன்றைக்கு தன் மகனை கொண்டு வந்து பெரிய மாமேதை போல, ம.தி.மு.க.,வின் அடுத்தகட்ட தலைவர் இவர் தான் என நிறுத்துகிறார். கூட்டணியில் பதவிகளை பெற்று விட்டு, தன் வீட்டணியை முன் நிறுத்துகிறார்; வைகோ ஒரு சந்தர்ப்பவாதி.
வைகோ பின்னாடி போய், அரசியல் வாழ்க்கையை தொலைத்தவர்களில் நீங்களும் ஒருத்தர்... அந்த குமுறல் இன்னும் உங்களுக்கு குறையலை போலும்!
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: திருப்பரங்குன்றம் வெறும் மலை அல்ல; அது தமிழர்களின் ஆன்மிக அடையாளம்; முருக பக்தியின் வரலாற்று சின்னம். அந்த புனித திருத்தலத்தை காக்க, தங்கள் உயிரையே அர்ப்பணித்த குட்டி போன்றவர்களின் வரலாறு மறைக்கப்படக் கூடாது; மறக்கப் படவும் கூடாது.
திருப்பரங்குன்றத்தின் ஆன்மிக அடையாளத்தை அழிக்கத் துடிப்பது மாற்று மதத்தினர் அல்ல... ஹிந்து மதத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தான் முன்னணியில் நிற்கிறாங்க!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்களே, நேரடியாக ஒருவரும், மறைமுகமாக மற்றொருவரும் என, காங்கிரசும், பா.ஜ.,வும், வி.சி.க.,வும், பா.ம.க.,வும் ஆதரிக்கும் ஆச்சரியமாக த.வெ.க., இருக்கிறது. சமூக நீதி, மதச்சார்பின்மை என எந்த கொள்கைகளும் இல்லாத, ‘நோ ஸ்டாக்’ குடோனாக, காரியத்திற்கு எதையும் செய்கிற, அதன், ‘கார்ப்பரேட்’ தனமே இதற்கு காரணம்.
‘மாற்று கொள்கைகள் கொண்டவர்களையும் ஈர்க்கும் சக்தியாக த.வெ.க., இருக்கிறது’ என்று நேர்மறையாகவும் இதை பார்க்கலாமே!
அதானே... ஆட்சியை பிடிச்ச த.வெ.க., வாங்கிய மொத்த ஓட்டுகளே 1.72 கோடி தான்... நிஜமாகவே அ.தி.மு.க.,வில் 2 கோடி தொண்டர்கள் இருந்து, அவங்க ஓட்டு போட்டிருந்தாலே, அந்தக் கட்சி ஆட்சியை பிடிச்சிருக்குமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், த.வெ.க., பிரமுகருமான செம்மலை அறிக்கை:
அ.தி.மு.க.,வில் 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற மொத்த ஓட்டுகள், 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 தான். இதில் மக்களாக முன்வந்து அளித்த ஓட்டுகளையும், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளையும் கழித்து கணக்கு பார்த்தால், அ.தி.மு.க.,வில் எஞ்சியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தெரிந்து விடும்.
