தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 10

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 10

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 10


PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு: காங்கிரஸ் இருக்கிற கூட்டணியில் நாங்கள் இடம் பெற மாட்டோம். அக்கட்சி நுாற் றாண்டு கடந்த கட்சி என்றாலும், அது தீண்டத்தகாத சக்தியா போயிடுச்சு. காங்கிரஸ் தலைவர்கள் அதிகாரத்திற்கும், பதவி ஆசைக்காகவும், துரோகிகளாக மாறி விட்டனர். நாங்கள் எந்த கூட்டணி கட்சியையும் வெளி யேற்றியதில்லை. எனவே, காங்கிரஸ் போன்ற துரோகிகளுடன் சேர்ந்து, தி.மு.க., வால் வேலை செய்ய முடியாது.

இதேபோல, ‘பா.ஜ.,வுடனும் எக்காலத்திலும் கூட்டணி இல்லை’ன்னு அறிவிக்கும் துணிச்சல் உங்களிடம் இருக்கா?

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி அறிக்கை: விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால், அன்றாட தேவைகளுக்கு கூட செலவழிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வாங்கும் சக்தி குறைந்து, மக்களின் நுகர்வு குறைவதன் தாக்கம் தான், தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வசூல் சரிவிலும் வெளிப்படுகிறது. நாடு முழுதும் சில பொருட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி., வரி குறைப்பை, தன் சாதனையாக த.வெ.க., அரசு மார்தட்டிக் கொள்வது அபத்தமானது.

உங்க ஆட்சியில், மத்திய அரசின் சில திட்டங்களுக்கு நீங்க, ‘ஸ்டிக்கர்’ ஒட்டியது இல்லையா...? அதையே த.வெ.க., அரசும் கடைப்பிடிக்குது போலும்!

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேட்டி: ஸ்டாலின் முதல்வராக இருந்தபோதும் கொலைகள் நடந்துள்ளன. பல ஆண்டுகளாக கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன; திடீரென நடக்கவில்லை. தமிழகத்தில் நடந்து வரும் கொலை சம்பவங்களை தடுக்கும் விதமாக, போலீஸ் துறைக்கு பல்வேறு உத்தரவுகளை முதல்வர் விஜய் பிறப்பித்த வண்ணம் உள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்கு, த.வெ.க., அரசு பொறுப்பாகாது.

த.வெ.க.,வினர் கூட இந்த அளவுக்கு விழுந்தடிச்சிட்டு விளக்கம் தரலையே... முதல்வர் விஜயின் செய்தி தொடர்பாளர் மாதிரியே நீங்க பேசுறீங்களே!

பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி:


தமிழக முதல்வர் விஜய், ‘கோட் சூட்’ அணிந்து வருவது, முருங்கைக்காய் பறிப்பது, பட்டு வேட்டி, சட்டை அணிவது, அழகாக கையசைப்பது, கடையில் டீ குடிப்பது போல நடிப்பது, அஜித்தை கட்டிப் பிடிப்பது, ஓடாத கார் பந்தயத்தில் கையாட்டி சிரிப்பது என பலவிதமாக மக்களுக்கு தேவையான, முன்னேற்றத்திற்கான விஷயங்களை செய்கிறார். இதை எல்லாம் பார்த்து வியக்கிறோம். தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்யாத ஒரு சாதனையை விஜய் செய்கிறார். ஆனால் இது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.
- விஜயின் ரசிகர்கள் கூட, அவரை இந்த அளவுக்கு பார்த்து பார்த்து ரசிச்சிருப்பாங்களான்னு தெரியல!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us