தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 8

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 8

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 8


PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா.ஜ., தமிழக செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை: பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் வழங்கப்படும் முட்டைகள், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று சேரவில்லை என புகார் எழுந்துள்ளது. மாணவர்களுக்கு முட்டை இல்லாமல் உணவு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் சத்துணவு முட்டைகளின் தரம் குறித்த விமர்சனம் எழுந்தாலும், த.வெ.க., ஆட்சியில் நடந்தது போல மொத்தமாக மாயமானதில்லை.

‘த.வெ.க.,வை விட தி.மு.க., ஆட்சி பரவாயில்லை’ன்னு சொல்லி, தி.மு.க., கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடுறாரோ?

காங்கிரஸ் பிற்படுத்தப் பட்டோர் பிரிவின், தமிழக துணை தலைவர் ரவிராஜ் பேட்டி: கர்ப்பிணியருக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமை யில் நடந்த நிகழ்ச்சியில், ராஜ்யசபா காங்., – எம்.பி., கிறிஸ்டோபர் திலக் மெழுகுவர்த்தியால் குத்துவிளக்கேற்ற முயன்றார். அப்போது, த.வெ.க., – எம்.எல்.ஏ., நவல்பட்டு விஜி, விளக்கேற்ற எதிர்ப்பு தெரிவித்து அதை தட்டி விட்டார்; இந்த அநாகரிகமான செயல் கண்டிக்கத்தக்கது.

ரெண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்தும், இப்படி சிறுபிள்ளைத்தனமா அடிச்சுக்கலாமா?

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பேட்டி: தமிழகத்தில், பா.ஜ., ஆட்சி தான் நடக்கிறது. பா.ஜ.,வுக்கு அஞ்சி நடுங்கி, அதன் ஆசீர்வாதத்துடன் தான் த.வெ.க., அரசு செயல்படு கிறது. பா.ஜ., கொண்டு வந்த மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராடி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க., அரசு. அப்படி இருக்கும்போது தி.மு.க., எப்படி பா.ஜ.,வுடன் கைகோர்க்கும்?

இதை நீங்க தான் சொல்றீங்க... ஆனா, ‘பா.ஜ.,வுடன் ஒரு நாளும் கூட்டணி அமைக்க மாட்டோம்’னு, தி.மு.க.,வில் யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்களே!

தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் பேட்டி:


‘இடைத்தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பில் த.வெ.க., தான் வெற்றி பெறும். தி.மு.க., மூன்றாவது இடத்துக்கு செல்லும்’ என சிலர் கூறுகின்றனர். இதே கருத்து கணிப்பில் தான், கடந்த தேர்தலில் நாங்கள் தான் அதிக இடங்கள் வருவோம்; ஒன்பது, ‘சீட்’கள் தான் த.வெ.க., வரும் என்றும் கூறினர். அந்த கருத்து கணிப்பு பொய்யா இல்லையா; அவர்கள் தானே ஜெயித்தனர்? எனவே, இந்த கருத்து கணிப்பு எல்லாம் வெறும் குருட்டு கணக்கு.
- கருத்து கணிப்பில் நீங்க மூன்றாவது இடம் வருவீங்கன்னு சொல்லியிருப்பது, இரண்டாம் இடமாக வேணும்னா மாறலாம்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us