sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அறிக்கை: ரூபாய் என்ற சொல், சமஸ்கிருதத்தில் உள்ள, 'ருப்யா' என்ற சொல்லில் இருந்து வந்தது. ரூபாய் குறியீடான இது ஒரு மதத்தையோ, மொழியையோ குறிக்கவில்லை. தமிழன் கண்டுபிடித்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்து, உலக அளவில் இந்தியாவை தலைநிமிர செய்த இந்த செயலை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் அரசு, 'ரூ' என மாற்றியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படுத்திய அவமானம்.

தமிழன் கண்டுபிடித்து இந்தியாவுக்கே பெருமை சேர்த்து, உலக அளவில் இந்தியாவை தலைநிமிர செய்த இந்த செயலை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் அரசு, 'ரூ' என மாற்றியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படுத்திய அவமானம்.

பார்த்தீங்களா... தமிழகத்துல எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இப்ப நீங்க உட்பட எல்லாரும் ரூபாய் குறியீட்டை மாற்றியது பற்றி பேச ஆரம்பிச்சுட்டீங்களே... இதை தானே தி.மு.க.,வும் எதிர்பார்த்தது?



தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் அறிக்கை: நிலம் எடுப்பதில் தி.மு.க., அரசு அலட்சியம் காட்டியதால், திண்டிவனம் -- திருவண்ணாமலை ரயில் பாதை திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் திருவண்ணாமலைக்கு தினசரி வந்து செல்கின்றனர்.ஆனால், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் பாதை இல்லாதது, பெரும் குறையாக உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வேலு, முதல்வரிடம் செல்வாக்கு பெற்ற நபரா இருந்தும், இதுல ஆர்வம் காட்டாதது ஏன்?

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி: தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிப்பதை தே.மு.தி.க., ஏற்றுக் கொள்ளாது. தமிழகத்தில் உள்ள லோக்சபா தொகுதிகள் குறைக்கப்பட்டால், அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்போம்.

என்னதான் தமிழக அரசுக்கு விழுந்து விழுந்து ஆதரவு தெரிவிச்சாலும், இவர் எதிர்பார்க்கும் ராஜ்யசபா சீட் அங்ேகயும் கிடைக்காது!

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: தி.மு.க.,ஆட்சியில் அறிவியல்பூர்வமான ஊழல்கள் நடப்பது வழக்கம். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதை அனைவரும் அறிவர். ஊழலுக்கு எதிராக கட்சி துவங்கிய கெஜ்ரிவால், ஊழல் செய்ததால் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கும் அதே நிலை ஏற்படும்.

வரும் 2026 சட்டசபைதேர்தலில் தி.மு.க., தோற்கும் என, போகுமிடம் எல்லாம் சொல்றாரே... தி.மு.க., கூட்டணி வலுவாக இருந்து, இவங்க அணி 'வீக்'கா இருப்பதால், இவரதுஆரூடம் பலிக்குமா என்பது கேள்விக்குறிதான்!






      Dinamalar
      Follow us