sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஏப் 30, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 30, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேச்சு: பெரிய கட்சி சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தால், குவார்ட்டர், 1,500 பணம் வழங்கி அனுப்பி வைப்பர். ஆனால், த.வெ.க.,வில் அப்படியில்லை. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளை பார்த்தவர்களுக்கு, நம்மை பற்றி தெரியாது. 2026ல் த.வெ.க., தான் முதன்மையான கட்சி. அதன்பின் தான் தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகள். எந்த ஊழல் பணத்தாலும், 2026 தேர்தல் வெற்றியை பெற முடியாது.

அது சரி... '2026ல் எதிர்க்கட்சி வரிசையில் அமரவே, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் போட்டியிடுது'ன்னு சொல்லாம சொல்றாரோ?

தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார் பேச்சு: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இரண்டே நாட்களில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்றவர் பிரதமர் மோடி. காஷ்மீர் பெருந்துயரில் நாடே மூழ்கியிருந்த போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு விருந்து கொடுத்தவர், அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி. தேசிய ஜனநாயக கூட்டணியில் தேசப்பற்றின் அளவுகோல் இதுதான்.

இவங்க கட்சியின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை ஒட்டி, புத்தாண்டு கொண்டாட வியட்நாம் பறந்த ராகுல் கதையை மறந்துட்டாரோ?

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி: பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் அனைத்து தலை வர்களும் தேசப்பற்றுடன் பேச வேண்டும். 'டிவி' விளம்பரத்திற்காக கருத்துகளை தெரிவிக்கக் கூடாது. 'பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு எங்களின் முழு ஆதரவு' என, காங்., ஆளும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இவரை போன்ற தலைவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே, பக்கத்துல இருக்கிற கர்நாடகா காங்., முதல்வர் சித்தராமையா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகிறாரே... காங்., கட்சிக்குள்ளேயே இந்த விஷயத்தில் ஒற்றுமை இல்லையே!

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேட்டி: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்து பார்லிமென்டில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேசியுள்ளார். பல விஷயங்களுக்கு வெற்றியும் கிடைத்துஉள்ளது. அதற்காகவாவது அவர் மீண்டும் எம்.பி.,யாக வேண்டும். வைகோவை, ராஜ்யசபாவுக்கு அனுப்புவது குறித்து தி.மு.க., தலைமை நல்ல முடிவு எடுக்கும்.

கமலுக்கு ஒரு சீட், வைகோவுக்கு ஒரு சீட்னு தி.மு.க., தாரைவார்த்து குடுத்துட்டால், அந்த கட்சியினருக்கு என்னதான் மிஞ்சும்?






      Dinamalar
      Follow us