sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனுதினமும் உயிரை பணயம் வைத்து கடலுக்குள் போகும் மீனவர்களுக்கு, இந்த திட்டம் பெரிய வரப்பிரசாதம் தான்!

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை பேட்டி: சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளில், 'பாஸ்' மதிப்பெண்கள் பெறவில்லை என்றால், அந்த மாணவர்களை, 'பெயில்' செய்து அதே வகுப்பில் படிக்க வைத்து விடுவதை போல, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், பாஸ் ஆவதற்கு குறைவான மதிப்பெண் பெற்றால், அந்த குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்தி, சிறப்பு பயிற்சிகள் அளித்து, இரண்டு மாதங்கள் கழித்து மறுபடியும் பரீட்சை எழுத வைத்து, அவர்களை தகுதி உள்ளவர்களாக மாற்றி, அடுத்த வகுப்பிற்கு அனுப்பி விடுவர்.

நம்ம மாணவர்கள் பட்டை தீட்டப்பட்டு வைரங்களாக மாறாமல், கூழாங்கற்களாகவே இருக்கட்டும்னு அமைச்சர் நினைக்கிறாரோ?

வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு: 'தேசியக் கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம்' என, தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. ஆகவே தான், மத்திய அரசும் தமிழகத்தின் கல்விக்கென நிதி ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைத்து, தமிழக அரசுக்கு நெருக்கடி தருகிறது. ஜனநாயக சக்திகள் இதை புரிந்து கொண்டு, தேசிய அளவில் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதும் என்பதுதான் எங்கள் கருத்து.

அதுவும் ஏன் வைக்கணும்... 'நீட் நுழைவு தேர்வு வேண்டாம்'னு சொல்ற மாதிரி, 'பொதுத் தேர்வே வேண்டாம்'னு ஒரே போடா போட்டுட வேண்டியது தானே!



தி.மு.க., மாணவரணி மாநில செயலர் ராஜிவ்காந்தி அறிக்கை: ஜாதிய ஒடுக்குமுறைகள் புரையோடி போய் கிடக்கிற இந்தியாவில், பிறப்பின் அடிப்படையில் தான் ஒருவருக்கு கல்வி பெறும் உரிமை என்ற சூழலை எதிர்த்து, ஈ.வெ.ராமசாமி, அம்பேத்கர், அண்ணாதுரை, கருணாநிதி போன்ற தலைவர்கள் நடத்திய நுாற்றாண்டு கால போராட்டத்திற்கு பின், இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு தெருவுக்கும், ஊர் மக்களுக்கும் கல்வி எனும் அடிப்படை உரிமை சாத்தியமாகியிருக்கிறது.

இந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை விட்டுட்டாரே!



தமிழக பா.ஜ., மீனவரணி தலைவர் எம்.சி.முனுசாமி பேச்சு: பிரதமரின் மீன்வள திட்டத்தின் கீழ், மீனவர்களின் பாதுகாப்பிற்காக பதிவு செய்த விசைப்படகுகளில், 1 லட்சம் இலவச, 'டிரான்ஸ்பாண்டர்'கள் பொருத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் வாயிலாக, மீன்வளம் உள்ள இடங்கள், புயல், மழை விபரம் தெரிவிக்கப்படுவதுடன், மீனவர்கள் உடல்நலம் பாதித்தால் ஹெலிகாப்டர் வாயிலாக, மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்ற முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us