sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஜூன் 04, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 04, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை பேட்டி:

தி.மு.க., பொதுக்குழுவின் ஏழாவது தீர்மானம், 'உதயநிதிக்கு எல்லா விதத்திலும் துணை போவது' என உள்ளது. இது என்ன தீர்மானம்? இப்போது எதற்காக துணை நிற்கின்றனர். இப்போதுள்ள பிரச்னைகளுக்காகவா, ஓடிப்போன அவரது நண்பர்களுக்காகவா என்பது புரியவில்லை. தமிழகத்தை மேம்படுத்த தீர்மானங்கள் போட்டால் நல்லது. மத்திய அரசை கண்டிப்பதற்காகவே பொதுக்குழு போட்டு, கண்டன தீர்மானங்கள் போட்டுள்ளனர்.இவங்களும் ஒரு பொதுக்குழுவை கூட்டி, மாநில அரசை கண்டித்து தீர்மானங்களை போட்டால் என்ன?



தமிழக பா.ஜ., பொருளாளர்எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: சொத்து வரி, பால் விலை, மின் கட்டணம் உயர்வு; ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் மறுப்பு; தாலிக்கு தங்கம் திட்டம் ஒதுக்கி வைப்பு என, இவை அனைத்திற்கும் தி.மு.க., கூறிய காரணம், 'போதுமான நிதி இல்லை' என்பதுதான். ஆனால், கேளிக்கை வரியை குறைக்க மட்டும் எப்படி நிதி வந்தது. உதயநிதி நடத்தும் சினிமா தயாரிப்பு கம்பெனிகளுக்கு, நிதி வரவு குறைந்து விடக்கூடாது என்பதால், இந்த அரசாணையோ?

எல்லாத்தையும் ஏத்து ஏத்துன்னு ஏத்தியவங்க, கேளிக்கை வரியை மட்டும் இறக்கிய பின்னணி இதுதானா?



தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: தமிழகத்தில் உள்ள பல்கலைகளில், 50 சதவீதம் ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. இவற்றில், 30 சதவீத பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளனர். இதில், 10 சதவீத பணியிடங்களை, ஓய்வு பெற்ற பேராசிரியர்களை வைத்தும், 10 சதவீதத்தை தொழில் வல்லுநர்களை வைத்தும், 10 சதவீதத்தை வெளிநாட்டு பேராசிரியர்களை வைத்தும் நிரப்ப, பல்கலைகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. இம்முடிவால், அரசு கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவி பேராசிரியர்களாக வேண்டும் என்ற கனவில் உள்ள இளைஞர்களின் எதிர்காலம், சிதைந்து போயிருக்கிறது.

முழுநேர பேராசிரியர்களை நியமித்தால், லட்சக்கணக்குல சம்பளம் தரணுமே... நிதி இல்லாமல்தான் இந்த முடிவுக்கு வந்திருக்காங்க!

தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: மதுரையில், முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில் இருந்த கால்வாய்க்கு திரை போட்டு மறைத்தது, இந்த ஆட்சி நிர்வாகத்தின் அவலத்தை வெளிக்காட்டி உள்ளது. மக்களிடம் வசூலிக்கும் வரியில், அந்த கால்வாயை துார்வாரியதற்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டது. நீர்நிலைகளை பேணிக்காக்க, மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது போன்ற விபரங்களை, மாநில அரசு வெளியிட முன்வர வேண்டும்.

'சென்னையில், கூவத்தை சுத்தப்படுத்துறோம்'னு பல நுாறு கோடிகளை சாப்பிட்ட மாதிரி, மதுரையிலும் நடந்திருக்குமோ?

புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை பேட்டி:

தி.மு.க., பொதுக்குழுவின் ஏழாவது தீர்மானம், 'உதயநிதிக்கு எல்லா விதத்திலும் துணை போவது' என உள்ளது. இது என்ன தீர்மானம்? இப்போது எதற்காக துணை நிற்கின்றனர். இப்போதுள்ள பிரச்னைகளுக்காகவா, ஓடிப்போன அவரது நண்பர்களுக்காகவா என்பது புரியவில்லை. தமிழகத்தை மேம்படுத்த தீர்மானங்கள் போட்டால் நல்லது. மத்திய அரசை கண்டிப்பதற்காகவே பொதுக்குழு போட்டு, கண்டன தீர்மானங்கள் போட்டுள்ளனர்.இவங்களும் ஒரு பொதுக்குழுவை கூட்டி, மாநில அரசை கண்டித்து தீர்மானங்களை போட்டால் என்ன?








      Dinamalar
      Follow us