PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM

தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி: தாங்கள்
எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக வந்தால் போதும் என, காங்கிரஸ் தலைவர்கள் மட்டும்
நினைத்தால், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைத்து விட முடியாது.
காங்கிரஸ்காரர், தமிழகத்தின் முதல்வராக வேண்டும். அதேபோல், ஒவ்வொரு
காங்கிரஸ்காரரும் அவரவர் உழைப்பு, திறமைக்கு ஏற்ப அமைச்சர்களாக, எம்.பி., -
எம்.எல்.ஏ.,க்களாக வரவேண்டும் என்ற கருத்துடன் செயல்பட்டால், காங்கிரஸ்
ஆட்சியை தமிழகத்தில் அமைக்க முடியும். இவர் அஞ்சு வருஷம் தமிழக காங்.,
தலைவரா இருந்தப்ப, காங்., ஆட்சி அமைக்க என்ன முயற்சி எடுத்தாராம்?
***************
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: 'டெல்டா மாவட்டங்களில், தொடர் மழையால், 33 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும்' என, வேளாண் அமைச்சரும், அதிகாரிகளும் கூறுவது, விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த, 33 சதவீத நிபந்தனை, பயிர் சேதங்களை கணக்கு எடுக்கும் அதிகாரிகள், 'கல்லா' கட்டதான் உதவும்!
***************
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தேர்வு நடத்தப்பட்டு, 2,538 பேருக்கு பணி நியமன ஆணைகளை கடந்த ஆக., 6ல் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த பணி நியமனங்களில் பெரும் ஊழல் நடந்ததை அமலாக்கத்துறை தகுந்த ஆதாரங்களுடன் கண்டறிந்திருக்கிறது. இந்த விவகாரத்தில், தமிழக காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை என்றால், நீதிமன்றம் சென்று பா.ஜ., போராடும்.
இவரது கட்சியின் மற்ற தலைவர்கள் சி.பி.ஐ., விசாரணை கேட்கிறாங்க... முதல்வர் வசம் இருக்கும் போலீஸ் துறை, நேர்மையா விசாரணை நடத்தும்னு இவர் அப்பாவியா நம்புறாரோ?
***************
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில எல்லைக்குள், 1,250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு அளித்துள்ள விளக்கம், இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி நடந்திருப்பதை உறுதி செய்துள்ளது. சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே, கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து, அவற்றை அழிப்பது கண்டிக்கத்தக்கது.
கடலுக்கு நடுவில் பிரமாண்ட பேனா சிலை வைக்க துணிஞ்சவங்க, சதுப்பு நிலத்தை எல்லாம் விட்டு வைப்பாங்களா என்ன!
தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி: தாங்கள் எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக வந்தால் போதும் என, காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் நினைத்தால், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைத்து விட முடியாது. காங்கிரஸ்காரர், தமிழகத்தின் முதல்வராக வேண்டும். அதேபோல், ஒவ்வொரு காங்கிரஸ்காரரும் அவரவர் உழைப்பு, திறமைக்கு ஏற்ப அமைச்சர்களாக, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக வரவேண்டும் என்ற கருத்துடன் செயல்பட்டால், காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க முடியும். இவர் அஞ்சு வருஷம் தமிழக காங்., தலைவரா இருந்தப்ப, காங்., ஆட்சி அமைக்க என்ன முயற்சி எடுத்தாராம்?
***************

