sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : ஜூன் 02, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 02, 2026 12:28 AM

1


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி: விஜய் போன்ற நல்ல தலைவர் நாட்டில் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி த.வெ.க.,வில் இணைகின்றனர். அதை வேண்டாம் எனக் கூற முடியாது. குதிரை பேரம் என்றால் என்ன என்று புரியவில்லை. நாங்கள், அரேபியாவுக்கு குதிரை வாங்கவா சென்றோம்? எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தவர்கள், த.வெ.க., வேட்பாளராக அறிவிக்கப்படுவரா என்பதை தேர்தல் நேரத்தில் பார்த்து கொள்ளலாம்.

ராஜினாமா செஞ்சவங்களுக்கு இடைத்தேர்லில் சீட் தராமல், குதிரை பேர குற்றச்சாட்டை முறியடிக்கலாமே!

புவனகிரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் பேட்டி:


த.வெ.க., அரசு, சில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்துள்ளது. அந்த கட்சிகள் மீது, த.வெ.க.,வுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். கூடுதலாக சில இடங்களில் தாங்களே வெற்றி பெற்றால், ஆட்சியை தொடர்ந்து நடத்தலாம் என்பதற்காக ஆட்களை பிடிக்கும் வேலையில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக சிலர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.,வில் சேர்ந்துள்ளனர். அவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டால், அவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

இஷ்டத்துக்கு கட்சி தாவி, மக்களை ஏமாளிகள் ஆக்குவோரை வீட்டுக்கு அனுப்புவதே சரியான தீர்ப்பா இருக்கும்!

தி.மு.க., முதன்மை செயலர் நேரு பேச்சு:


தேர்தல் முடிவுகளை பார்த்தால், நமக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கும் உள்ள ஓட்டு வித்தியாசம் வெறும், 17 லட்சங்கள் தான். 27 தொகுதிகளில், 1,000 முதல் 2,000 ஓட்டுகள் என்ற மிகக் குறைந்த வித்தியாசத்திலேயே வெற்றியை தவற விட்டிருக்கிறோம். சட்டசபை தேர்தல், சில நாட்கள் முன்னதாக நடந்திருந்தால் வெற்றி வாய்ப்பு நமக்கே சாதகமாக இருந்திருக்கும். கடைசி மூன்று நாட்களில் வீசிய மாற்று காற்றால், இந்த சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

முதல்வராக இருந்த ஸ்டாலினே தேர்தலில் தோற்று போனது, இவருக்கு சிறிய பின்னடைவா தெரியுதா?

திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை பேட்டி:


ம.தி.மு.க., என்பது அரசியல் இயக்கம். எங்களுடைய நிலைப்பாடு குறித்து, நான் மட்டும் முடிவெடுக்க முடியாது. உயர்மட்ட நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களின் கருத்துகளை கேட்டு தான், உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் தொடர்வது குறித்து முடிவு செய்ய முடியும். த.வெ.க.,வை மற்றொரு திராவிட இயக்கமாகத் தான் நான் பார்க்கிறேன்.

த.வெ.க., கூட்டணிக்கு இவர் அச்சாரம் போடுவது அப்பட்டமா தெரியுது... ஆனாலும், காலி பெருங்காய டப்பாவான இவங்க கட்சியை, விஜய் சேர்த்துக்குவாரா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us