தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : ஜூலை 19, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2026 12:26 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி:
பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் தி.மு.க., இடம் பெறாது. பா.ஜ., மற்றும் தி.மு.க.,வின் கொள்கைகள் வெவ்வேறானவை என்பதால், அவை ஒரு போதும் ஒன்றிணைய முடியாது. 'இண்டி' கூட்டணி கூட்டத்தில் தி.மு.க., பங்கேற்கவில்லை என்பது உண்மைதான். ஆயினும், நாங்கள் தொடர்ந்து தி.மு.க., - எம்.பி.,க்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.
கடந்த 1999 முதல் 2004 வரை, பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்து, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசிலும் தி.மு.க.,வினர் இடம் பிடிச்சிருந்தாங்க என்பதை இவர் மறந்துட்டாரோ?


ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேச்சு:

மதவாத அரசியலை எதிர்க்கத் தான், அன்று தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தோம். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட ஊழலற்ற நிர்வாகம் குறித்து பேசியதால், இன்று நாங்கள் மட்டுமல்ல, பிற கட்சிகளும் த.வெ.க., கூட்டணியில் இணைந்துள்ளன.

தி.மு.க.,வோ, அ.தி.மு.க., வோ... எதில் சேர்ந்தும் உருப்படியாய் உங்களுக்கு, 'கெத்து' பதவி கிடைக்கலைங்கிற குறையை மறைக்க என்னவெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க!

பா.ஜ., தமிழக செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை:

பொள்ளாச்சியில் மாட்டுச் சந்தை, எட்டயபுரத்தில் ஆட்டுச் சந்தை போல, தமிழகத்தில் எம்.எல்.ஏ.,க்களுக் கான குதிரை பேரச் சந்தை தான் இப்போதைய கேலிக்கூத்து. 'துாய சக்தி' எனக் கூறி ஆட்சிக்கு வந்து விட்டு, இன்று, 'பேர சக்தி'யாக மாறி விட்டீர்களே... தி.மு.க., - த.வெ.க., என இருதரப்பிலும் குதிரை பேர புகார்கள் இருக்கும் போது, த.வெ.க., அளித்த புகார் மீது மட்டும் உடனே வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது, எந்த விதத்தில் நியாயம்? உண்மை தன்மையை முழுமையாக கண்டறிய, அனைத்து தரப்பு புகார்களையும், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றுவதே, நியாயமான தீர்வுக்கு வழிவகுக்கும்.

ஏற்கனவே, கரூர் நெரிசல் பலி சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணையில் த.வெ.க., மாட்டிட்டு முழிப்பது போதாதா...? மறுபடியும் அவங்களை, 'கோர்த்து' விட பார்க்கிறா ரே!

தி.மு.க., இளைஞரணி செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அறிக்கை:

நடப்பாண்டுக்கான போலீசார் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு த.வெ.க., அரசு தள்ளி வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. இது, போலீஸ் துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. சீருடை பணி யாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டிருக்கும் அட்டவணையை திரும்ப பெற்று, நடப்பு ஆண்டிலேயே போலீசாரை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.

நீங்க நடத்திய ஐந்தாண்டு ஆட்சியில், எத்தனை போலீசாரை நியமனம் செய்தீங்க என்ற புள்ளி விபரங்களை வெளியிட முடியுமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us