தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : செப் 09, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:


சட்டசபை நிகழ்வுகளில் சபைக் குறிப்பில் இருந்து அதிகமாக நீக்கப்பட்டவை, இந்த ஆட்சியை வழிநடத்தும் அமைச்சர்களின் பேச்சுக்கள் தான். இந்த அழிரப்பர் கம்பெனியின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், அமைச்சர் வன்னியரசு பேசியதை, சக அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, சபாநாயகரிடம் சொல்லி நீக்கச் சொன்னது தான். நீர்த்தேக்கம் போல நீக்கங்களின் தேக்க மாக, வேடிக்கைகளையே வாடிக்கையாகக் கொண்டு நகரும் இந்த சட்டசபை, ஒரு வகையில் விஜயின், 'பிக்பாஸ்' என்றே சொல்லலாம்.

வன்னியரசும், ஆதவும் ஒரு காலத்தில் வி.சி., கட்சியில் ஒன்றாக இருந்தவங்க என்பதால், உங்களது சிண்டு முடியும் வேலை அவங்களிடம் எடுபடாது!

பா.ஜ., விவசாய அணி தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி:


கடந்த 1981ன் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் கோவில் நிலங்கள், 5.2 லட்சம் ஏக்கர் உள்ளன. இது, அறநிலையத்துறை தகவல். அதன் நில மதிப்பு, 10 லட்சம் கோடி ரூபாய். 55 ஆயிரம் கட்டடங்கள், 33 ஆயிரத்து 627 காலி மனைகள். ஆனால், அவற்றின் ஆண்டு வருமானம் வெறும், 120 கோடி ரூபாய். முறையாக நிர்வகித்தால், 2,500 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். 100 நாட்களில் த.வெ.க., அரசு செய்தது என்ன? கோவில் சொத்து எந்த வகையில் பக்தர்களுக்கு பயனளிக்கிறது?

நீங்க குறிப்பிடும் 2,500 கோடி ரூபாயில், பத்தில் ஒரு பங்கு கூட வருமானம் வரலை என்றால், அந்த பணம் எல்லாம் யார் கைகளுக்கு போகுது என்ற கேள்வி எழுதே!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், தமிழக தலைவர் ஜி.பிரமிளா அறிக்கை:


ஸ்ரீவைகுண்டம் த.வெ.க., நிர்வாகிகள் மீது, த.வெ.க.,வைச் சேர்ந்த பெண் முன்வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய புகார்களில், அரசு எந்தவித அரசியல் சார்பும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணின் நியாயத்தை முன்னிறுத்தி செயல்பட வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில், கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுப்பேன்'னு முதல்வர் விஜய் சொல்லியிருப்பதால, அந்த பெண்ணுக்கு கண்டிப்பா நீதி கிடைக்கும்!

காங்., தமிழக முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி:


தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்து வந்ததில், எல்லாருக்கும் வருத்தம் இருக்கிறது. நட்பு தான் முக்கியம். நட்பை விட்டு விலகுகிறோமே என்ற என் தனிப்பட்ட ஆதங்கத்தை, கட்சி தலைமையிடம் அப்போதே தெரிவித்திருந்தேன். ஆனால், கட்சி ஒரு முடி வெடுத்த பின், தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதால் அமைதியா னேன். நட்பு கூட்டணியை முறித்ததால், காங்கிரஸ் காரனுக்கு தான் அவமானம்; சங்கடம்.

நீங்க தலைவரா இருந்தப்ப, தி.மு.க.,வின் மாவட்டச் செயலர் போலவே செயல்பட்டீங்க... இப்பவும், அதே எண்ணத்தில் இருக்கீங்க என்பது நல்லாவே தெரியுது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us