தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : செப் 15, 2026 12:57 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2026 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகருமான அப்பாவு பேட்டி:

த.வெ.க., அரசு செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி, மின் வாரியத்தை தனியார்மயமாக்க முயற்சிக்கிறது. சேலத்தில் குடிநீர் வினியோகம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளதுடன், துாய்மைப் பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. போராடும் துாய்மைப் பணியாளர்களை சந்தித்து பேச, அரசு மறுத்து வருகிறது.

கடந்த தீபாவளி நேரத்தில், தி.மு.க., ஆட்சி நடந்தப்ப வடசென்னையின் துாய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைச்சதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மைப் பணியாளர்கள் பல நாட்களா தொடர் போராட்டம் நடத்தியதை மறந்துட்டீங்களோ?

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், 'அரசு மருத்துவமனைகள் படிப்படியாக தரம் உயர்த்தப்படும்' என தெரிவித்துள்ளதை பெரிதும் வரவேற் கிறோம். இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு, முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுத்தால், மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

உங்க துறையின் அமைச்சர் அருண்ராஜும் ஒரு டாக்டர் என்பதால், கண்டிப்பா டாக்டர்கள், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்கவும் படிப்படியாக நடவடிக்கை எடுப்பார்!

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி:

பேரிடர் மேலாண்மைக்காக, மத்திய அரசிடம் 1,200 கோடி ரூபாய் கோரப்பட்ட நிதி வந்துள்ளது. இதில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 289 கோடி ரூபாய், கால்நடை பராமரிப்புக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர், ஆர்.டி.ஓ., அலுவலக சீரமைப்பு பணிகளுக்கு, 582 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

'மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது'ன்னு, கடந்த தி.மு.க., ஆட்சியினர் குற்றஞ்சாட்டிய சூழலில், நீங்க கேட்டதுமே 1,200 கோடியை தந்திருக்கு என்றால், கேட்கிற விதத்தில் கேட்கணும் என்பது புரியுது!

மதுரை மத்திய தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., மதார் பதுருதீன் அறிக்கை:

கடந்த தி.மு.க., ஆட்சியில் கருணாநிதி நினைவாக, கடலில் பேனா சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வாய் மூடி மவுனியாக இருந்துவிட்டு, இப்போது பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார். பேனா சிலை வைக்கும் போது மீனவர்கள் மீது வராத பாசம், இப் போது மட்டும் எப்படி வருகிறது?

ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கிறப்ப, கூட்டணி தர்மத்துக்கு தான் முக்கியத்துவம் தர முடியும்... மீனவர்கள் நலனை எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியுமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us