PUBLISHED ON : அக் 01, 2026 12:00 AM

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு:
தேர்தல் கமிஷனை தனி நபர் ஆணையமா க மாற்றினால் மட்டும் பிரச்னை முடிந்து விடாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியே மோசடி' என த.வெ.க., அறிக்கை வெளியிட்டது. தேர்தல் கமிஷனர் மாற்றத்தை மட்டும் முன்னிறுத்துவது, தனி நபர்களை பலிகடா ஆக்கி தப்பிக்கும் முயற்சி. திசை திருப்பும் அரசியலுக்கு த.வெ.க., இரையாகாது.
ஆட்சிக்கு வரும் முன் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கடுமையாக கண்டித்த நீங்க, ஆட்சிக்கு வந்ததும், அப்படி ஒரு சம்பவம் நடக்கிற மாதிரியே காட்டிக்க மாட்டேங்கிறீங்களே!
பா.ஜ., தமிழக பொதுச் செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை:
கரூர் கூட்ட நெரிசலுக்கு, கட்டுப்பாடற்ற தன் ரசிகர்களும் ஒரு காரணம் என்பதை, இப்போது வரை முதல்வர் விஜய் உணர்ந்ததாக தெரியவில்லை. இன்றைக்கும் விஜய் எங்கு சென்றாலும், அவருடைய தொண்டர்கள் அரசியல் வயப்படாமல், ரசிகர்கள் மனநிலையில் முண்டியடித்து கொண்டு, தள்ளுமுள்ளு ஏற்படுத்தும் விதமாகவே செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என, அக்கட்சி உணராத வரை ஆபத்துகள் விலகாது.
உங்க கட்சி உட்பட மற்ற அரசியல் தலைவர்கள் கூட்டங்களுக்கு காசு, பணம் கொடுத்து ஆட்களை திரட்ட வேண்டியிருக்கு... விஜயை பார்க்க வர்றவங்க, தானா சேர்ந்த கூட்டம் என்ற பொறாமையில் புலம்புறீங்களோ?
ரசிகர்கள் மத்தியில், நடிகர் சூர்யா பேச்சு:
சமூக வலைதளங்களில் சில முட்டாள்கள் போடும் பதிவுகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தால், நாமும் முட்டாளாகி விடுவோம். நாம் நாமாகவே இருப்போம்; அவங்க, அவங்களாகவே இருக்கட்டும். அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றோ, மாற்ற வேண்டும் என்றோ நினைத்தால் அது ரொம்ப கஷ்டம். சில பேருக்கு புரியும்; முக்கால்வாசி பேருக்கு புரியாது. உங்கள் ஆற்றலை வீணடிக்க வேண்டாம்.
சமூக வலைதள பதிவுகளுக்கு பதில் தர்றோம்னு எல்லாரும் கிளம்பிட்டா, நாட்டுல எந்த வேலையும் நடக்காது!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
இடைத்தேர்தலுக்கு த.வெ.க., கேட்டுக் கொண்டதால், ஆதரவு அளித்தேன் த.வெ.க., அரசு மக்கள் நலன் சார்ந்து, 120 நாட்களை நிறைவு செய்து, நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளிலும் த.வெ.க., வெற்றி பெறும். தே.ஜ., கூட்டணியில் இருந்ததை நானே மறந்து விட்டேன்.
தே.ஜ., கூட்டணி சார்பில், ஆறு வருஷம் ராஜ்யசபா எம்.பி., யாக இருந்ததையும் சேர்த்தே மறந்துட்டீங்களோ?
