தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : அக் 02, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: முன்னாள் முதல்வரை, 'அங்கிள்' என்று அழைப்பதன் வழியே, முதல்வர் விஜய் தன்னை ஒரு இளைஞன் போல் பிம்பப்படுத்த முயற் சிக்கிறார்.

கடந்த 1974ல் பிறந்த இவர், 52 வயதை கடக்கும் நிலையில், பிறரை கேலி செய்து தனக்கு இளமை வேடம் தரிப்பது, மலிவான மனக்கணக்கு அல்லவா? அது சரி... முதிர்ச்சியோடு கூடிய முதுமை அழகானது; அது ஸ்டாலினிடம் இருக்கிற து.

'ஸ்டாலினை அங்கிள்னு அழைச்சிட்டதா ஆதங்கப் படுறீங்களே... ஆனா, 'மை ஸ்வீட் அங்கிள்'னு முதல்வர் விஜய் பாசமா சொன்னதை ஏத்துக்கிற பக்குவம் உங்களுக்கு இல்லையா?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு: 'ஓட்டுக்கு பணம் கொடுத்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கும் கலாசாரத்தை உடைத்து இருக்கிறோம்' என, பெருமையாக வீர வசனம் பேசும் முதல்வர் விஜய், த.வெ.க., அரசின் தனி பெரும்பான்மையை உறுதி செய்ய, வேறு கட்சிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கும் புதிய அரசியல் கலாசாரத்தை அரங்கேற்றம் செய்துள்ளார்.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களை மீண்டும் த.வெ.க., சார்பில் போட்டியிட வைத்து, ஜனநாயகத்தை விலை பேசியுள்ளார்.

தி.மு.க.,விலும் 59 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயிச்சிருக் காங்களே... ஒருத்தராவது விலை போனாரா...? உங்க கட்சி தலைமை மீது குறையை வச்சுக்கிட்டு, ஆளுங்கட்சி மீது பாயலாமா?

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி: தமிழகத்தில் உள்ள 38 கலெக்டர்கள், எஸ்.பி.,க்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. தமிழகத்தைச் சாராதவர்கள் தான், முதல்வர் விஜயை ஆட்டி வைக்கின்றனர். புது எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுக்கும் அனுபவம் இல்லாததால், அதிகாரிகள் சொல்வதை அப்படியே ஏற்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர், வேற மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளா இருந்து, நிர்வாகம் பண்றது உங்களுக்கு தெரியாதா?

த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேச்சு:


தாராபுரத்தில் த.வெ.க., தேர்தல் பரப்புரையை தடுக்க, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டு சதி செய்கின்றன. எங்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தி, த.வெ.க., நிர்வாகிகளை தகாத வார்த்தைகளால் திட்டி, அடிக்க முயன்றனர்; அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இந்த விவகாரத்திற்கு பின், தி.மு.க.,வின் சில மாவட்டச் செயலர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க.,வின் கள்ளக்கூட்டணி தற்போது ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- இடைத்தேர்தலில் த.வெ.க., ஜெயிச்சிட்டா, அது நாடறிஞ்ச நல்ல கூட்டணியாக மாறவும் வாய்ப்பிருக்கு!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us