/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
2030ம் ஆண்டுக்குள் 100 கோடி ரூபாய் 'டர்ன் ஓவர்' இலக்கு!
/
2030ம் ஆண்டுக்குள் 100 கோடி ரூபாய் 'டர்ன் ஓவர்' இலக்கு!
2030ம் ஆண்டுக்குள் 100 கோடி ரூபாய் 'டர்ன் ஓவர்' இலக்கு!
2030ம் ஆண்டுக்குள் 100 கோடி ரூபாய் 'டர்ன் ஓவர்' இலக்கு!
PUBLISHED ON : ஏப் 10, 2024 12:00 AM

ஓசூரில் இருக்கும், 'பேக்ஸிமா பேக்கேஜிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவி:
பார்மா துறையில் வேலை பார்த்த, 22 ஆண்டுகளில் தென் மாநிலங்களுக்கான தலைமை அதிகாரி என்கிற அளவுக்கு உயர்ந்தேன். சொந்த தொழில் துவங்க, 2018ல் முடிவெடுத்தேன்.
'பேக்கேஜிங்' துறையில் நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும், அதிலும் இண்டஸ்ட்ரியல் பேக்கேஜிங் துறையில் பல வாய்ப்புகள் இருப்பதாகவும் தங்கையின் கணவர் கூறினார்.
இந்த துறையில், 'அன்ஆர்க்னைஸ்ட் பிளேயர்கள்' என்று சொல்லப்படும், முறைப்படுத்தப்படாத நபர்கள் அதிகம்.
எனவே, புரொபஷனலான சர்வீசை தந்தால் நிச்சயம் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருப்பதை உணர்ந்தேன்; எனவே பேக்கேஜிங் துறையில் இறங்க முடிவு எடுத்தேன்.
இந்த துறையில், சென்னையை விட ஓசூரில் அதிக வாய்ப்பு இருப்பதால், அங்கு பிசினஸ் துவங்க முடிவெடுத்தேன். ஆரம்பத்தில், 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன்.
பேக்கேஜிங் ஆர்டர்களுக்கு அலைந்து கொண்டு இருந்த போது, திறமையான இளைஞர்களை சந்தித்தேன். அவர்களை பணிக்கு அமர்த்திக் கொண்டேன்.
ஆர்டர் வாங்குவதில் நான் காட்டிய ஆர்வத்தை, காஸ்ட்டிங் மற்றும் பைனான்ஸ் மேனேஜ்மென்ட் செய்வதில் காட்டவில்லை. இதனால், எனக்கு முதல் ஆண்டிலேயே, 8 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
ஆனால், நான் அது பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து உற்சாகமாக வேலை பார்த்து வந்தேன்.
மல்ட்டி நேஷனல் நிறுவனங்களுக்கு பேக்கேஜிங் தீர்வுகளை தருகிற அதே நேரத்தில் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. பிசினஸ் வெற்றி பெற துவங்கிய நேரத்தில், கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு, ஊரே முடங்கும் நிலை ஏற்பட்டது.
என்னை நம்பி ஆறு தொழிலாளர் குடும்பங்கள் இருந்தன. இவர்களுக்காகவாவது பிசினசை தொடர்ந்து நல்லபடியாக நடத்தி ஜெயிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அந்நேரத்தில் பொறுமையாக இருந்ததன் விளைவாக அடுத்தடுத்து புதிய ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தன. தொழில் துறையில் முன்னணியில் இருக்கும் பல நிறுவனங்களின் ஆர்டரை பெற்று, சிறப்பாக செய்து முடித்தேன்.
இதனால், 2021 - 22ல் 1.8 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்தேன். 2022 - 23ம் ஆண்டு 3 கோடி ரூபாய் அளவுக்கு டர்ன் ஓவர் அதிகரித்தது. இந்த ஆண்டு இப்போதே 8.5 கோடி ரூபாய்க்கு ஆர்டர்கள் உள்ளன.
வரும் 2030க்குள் 100 கோடி ரூபாய் அளவுக்கு டர்ன் ஓவர் செய்ய வேண்டும் என்பதே என் இலக்கு.உற்சாகமாக செய்வதால், நிர்ணயித்துள்ள இலக்கை நிச்சயம் அடைவோம்!

