/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கற்றாழை சாகுபடியில் மாதம் ரூ.78,000 லாபம் கிடைக்குது!
/
கற்றாழை சாகுபடியில் மாதம் ரூ.78,000 லாபம் கிடைக்குது!
கற்றாழை சாகுபடியில் மாதம் ரூ.78,000 லாபம் கிடைக்குது!
கற்றாழை சாகுபடியில் மாதம் ரூ.78,000 லாபம் கிடைக்குது!
PUBLISHED ON : மே 03, 2024 12:00 AM

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள கணக்குப்பிள்ளை புதுார் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் செல்லமுத்து:
பெரும்பாலான விவசாயிகள் ஒரே விதமான பயிர்களை சாகுபடி செய்வது தான் வழக்கம். ஆனால், சிலர் விதிவிலக்காக, மாற்று பயிர்கள் சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நான் சோற்றுக்கற்றாழை சாகுபடி வாயிலாக நிறைவான லாபம் பார்த்து வருகிறேன்.
எங்களுக்கு, 20 ஏக்கர் நிலம் இருக்கு. நான் பி.ஏ., படிச்சுட்டு, 1988-ல் விவசாயத்துக்கு வந்துட்டேன்.
எங்க வீட்டு பக்கத்தில், தண்ணீர் வசதியுள்ள, 10 ஏக்கர் பரப்பில் பலவிதமான பயிர்கள் சாகுபடி செய்தேன். 2000-வது ஆண்டு வரைக்கும் ரசாயன விவசாயம் தான் செஞ்சுகிட்டு இருந்தேன். அதன்பின், இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்.
கடந்த 2015ல் இந்த 10 ஏக்கர் பரப்பில் அங்கங்க பரவலாக 2 அடி உயரம், 3 அடி அகலம், 100 -- 200 அடி நீளமும் கொண்ட, 60 மண்ணேரிகளை அமைத்தேன்.
அந்த 60 மண்ணேரிகளை சுற்றியும் 2018-ல், மழை காலத்தில், 7,500 நாட்டு ரக சோற்று கற்றாழை செடிகளை நட்டேன்.
அடியுரமாக எருகூட கொடுக்கவில்லை. ஆனாலும், நல்லா செழிப்பாக வளர்ந்து வந்தது. இது, வறட்சி தாங்கி வளரக்கூடிய பயிர். கொஞ்சம்கூட தண்ணீர் பாய்ச்சவே இல்லை.
கற்றாழை தாய் செடிகளில் இருந்து, ஒரு ஆண்டிற்கு பின், பக்க கன்றுகள் உருவாக துவங்கின. பக்க கன்றுகளை மட்டும், தனியாக எடுத்து விற்பனை செய்ய துவங்கினேன். சின்ன கன்று, 10 ரூபாய், பெரிய கன்று, 20 ரூபாய் என விற்பனை செய்கிறேன்.
மாசத்துக்கு சராசரியாக, 4,000 கன்றுகள் விற்பனையாகின்றன. ஒரு கன்றுக்கு சராசரியாக, 15 ரூபாய் வீதம், 60,000 ரூபாய் வருமானம் வருகிறது.
கற்றாழை மடல்களையும் மாதத்திற்கு, 50 கிலோ விற்பனை செய்கிறேன். 1 கிலோவுக்கு, 20 ரூபாய் வீதம் விலை கிடைக்கிறது. அந்த வகையில் மாதத்திற்கு, 1,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கற்றாழையை மூலப்பொருளாக பயன்படுத்தி, ஹேர் ஆயில் தயார் செய்து விற்பனை செய்கிறேன். இந்த ஆயில், மாசத்துக்கு, 10 லிட்டர் விற்பனையாகிறது.
லிட்டர், 1,500 வீதம் 15,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மொத்தமாக மாசத்துக்கு, 73,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
இது தவிர, 240 சிவப்பு ரக டிராகன் புரூட் செடிகளை நடவு செஞ்சிருக்கேன். பயிர் செய்து, ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. சொட்டுநீர் பாசனம் அமைத்ததால், நல்லா செழிப்பாக வளர்ந்துட்டு இருக்கு.
இந்த ஆண்டு குறைந்தபட்சம், 100 கிலோ பழங்கள் மகசூல் கிடைக்கும்னு உறுதியாக நம்புகிறேன். கிலோவுக்கு, 150 ரூபாய் விலை கிடைக்கும்.
தொடர்புக்கு:
99940 55060