/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ரூ.7 கோடிக்கு வர்த்தகம் செய்கிறேன்!: கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் கொடுத்தால் வெற்றி உறுதி!
/
ரூ.7 கோடிக்கு வர்த்தகம் செய்கிறேன்!: கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் கொடுத்தால் வெற்றி உறுதி!
ரூ.7 கோடிக்கு வர்த்தகம் செய்கிறேன்!: கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் கொடுத்தால் வெற்றி உறுதி!
ரூ.7 கோடிக்கு வர்த்தகம் செய்கிறேன்!: கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் கொடுத்தால் வெற்றி உறுதி!
PUBLISHED ON : ஏப் 28, 2024 12:00 AM

'தி டிவைன் புட்ஸ்' நிறுவனத்தை நடத்தி வரும் சேலம், ஆத்துாரை சேர்ந்த கிரு மெய்கப்பிள்ளை:
என் பூர்வீகம் ஆத்துார். பி.இ., முடிச்சுட்டு, டில்லி புறநகரில் இருக்கிற நொய்டா நகரத்தில் ஒன்றரை ஆண்டு ஐ.டி., வேலையில் இருந்தேன்.
பின், அமெரிக்காவில் எம்.பி.ஏ., படிச்சுட்டு, அங்கேயே சில ஆண்டு வங்கி துறையில் வேலை செய்தேன்.
சொந்த ஊரில் விவசாயம் சார்ந்த பிசினஸ் செய்வது தான் விருப்பமாக இருந்தது. அமெரிக்க நண்பர்கள் பலரும், நம்மூர் பாரம்பரிய உணவுகள் பற்றி பெருமிதமாக சொல்வர்.
அதையெல்லாம் வெகுஜன மக்களிடம் கொண்டு போகும் எண்ணத்துடன், 2019-ல் வேலையை விட்டு, இந்தியா திரும்பி இந்த நிறுவனத்தை துவங்கினேன்.
துவக்கத்தில், மஞ்சள் துாள், மிளகுத்துாள், பனங்கற்கண்டு கலந்து செய்யப்பட்ட ஹெல்த்மிக்ஸ், மஞ்சள் சோப் மட்டும் விற்பனை செய்து வந்தேன்.
கொரோனாவுக்கு பின், மருத்துவ பயன்பாடுகள் கொண்ட உணவு பொருட்களுக்கான வரவேற்பு மக்களிடம் அதிகரித்தது. இதனால், ஆர்டர்கள் அதிகரித்து, எங்களுக்கு பலன் கிடைத்தது.
இந்த நிலையில் தான், தமிழக அரசின், 'டான்சீட் பண்ட்' வாயிலாக, 2022-ல், 10 லட்சம் ரூபாய் உதவித்தொகை கிடைத்தது.
புதிய ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், முதல்வர் ஸ்டாலின், இந்த நிதியை கொடுத்து ஊக்குவிச்சார்.
அப்போது, 'மூணு பொருட்களோடு இல்லாமல், இன்னும் பல்வேறு உணவு பொருட்களை தயாரித்து, விவசாயிகள் பலருக்கும் உதவுங்க'னு அதிகாரிகள் சிலர் ஆலோசனை கொடுத்தாங்க. அதன்பின், தொழிலை விரிவுபடுத்தினேன்.
பருத்திப்பால் மிக்ஸ், குல்கந்து மிக்ஸ், ஆப்பிள், -பீட்ரூட், -கேரட் கலந்த ஹெல்த் மிக்ஸ், முருங்கைத்துாள், தென்னை சர்க்கரை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட உணவு பொருட்களை விற்பனை செய்ய துவங்கினேன். 50க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமும், பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமும், உணவு பொருட்களை கொள்முதல் செய்கிறேன்.
அவற்றை, பேக்கேஜிங் யூனிட்டில் தரம் பிரித்து, ஆன்லைன் வாயிலாக ஆர்டர் பெற்று, விற்பனை செய்கிறேன்.
நேரடியாக, 20 பேருக்கும், மறைமுகமாக, 100 பேருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கும் நான், மாதம்தோறும், 10 டன் அளவிலான உணவு பொருட்களை விற்பனை செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறேன்.
ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வர்த்தகம் செய்து வருகிறேன். நம்மிடம் முதலீடு இல்லாத பட்சத்தில், நல்ல ஐடியா, அதை செயல்படுத்துவதற்கான திறமை இருந்தால், சரியான முதலீட்டாளரை கண்டடைந்து வெற்றி பெறலாம் என்பதற்கு நான் கண்கூடான உதாரணம்.
கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் கொடுத்தால் வெற்றி உறுதி!
தேர்வில்
தோற்பவர்களே அதிகம். ஆனால் பயிற்சி நிறுவனங்கள் எதிலும் சேராமல்,
ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதி, முதல் முயற்சியிலேயே வென்று, சாதனை நிகழ்த்திய உத்தர
பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண் அனன்யா
சிங்:
மத்திய அரசு நடத்தும் கடினமான யூ.பி.எஸ்.சி., தேர்வில்
பங்கேற்க, பல்லாயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி, பயிற்சி மையங்களில்
சேர்ந்தும், தேர்வில் தோற்பவர்களே அதிகம்.
எங்கள் ஊரில் இருக்கும்
செயின்ட் மேரி கான்வென்ட்டில் படித்தேன். பத்தாம் வகுப்பில் 96 சதவீதம்
மதிப்பெண்ணும், பிளஸ் 2 வகுப்பில் 98.25 சதவீதம் மதிப்பெண்ணும் பெற்று,
மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றேன்.
இளம் வயதிலிருந்தே,
ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பதே என் விருப்பம். மத்திய அரசு நடத்தும்
ஐ.ஏ.எஸ்., தேர்வெழுத, 2019ல் இருந்தே தயாரானேன்.
என் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில், 51-வது ரேங்க் பெற்று தேறினேன். அப்போது எனக்கு வயது, 22 மட்டுமே.
அந்த
தேர்வுக்காக, நாளொன்றுக்கு 7 - 8 மணி நேரம் வரை கடுமையாக
உழைத்திருக்கிறேன். ஆரம்ப கட்டம் மற்றும் மெயின் தேர்வுகளுக்கு ஒரே
சமயத்தில் தயாரானேன்.
புத்தகங்கள் வாசிப்பது எனக்கு விருப்பமான ஒன்றாகும். தவிர, 'சிந்தசைசர்' என்ற இசைக்கருவி வாசிக்கவும் தெரியும்.
தற்போது
மேற்கு வங்கத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கும் எனக்கு, இன்ஸ்டாகிராமில், 44
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலோயர்ஸ் இருக்கின்றனர். சமூக வலைதளங்களில்
சுறுசுறுப்பாக இயங்கி வருகிறேன்.
கொண்ட குறிக்கோளில் உறுதியாக
நின்று, கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் கொடுத்தால், வெற்றிக்கனியை நிச்சயம்
பறிக்கலாம் என்பதற்கு நான் சிறந்த உதாரணம்.

