sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

அகர் மரங்கள் விற்பனையில் ரூ.45 லட்சம் லாபம் எதிர்பார்க்கிறேன்!

/

அகர் மரங்கள் விற்பனையில் ரூ.45 லட்சம் லாபம் எதிர்பார்க்கிறேன்!

அகர் மரங்கள் விற்பனையில் ரூ.45 லட்சம் லாபம் எதிர்பார்க்கிறேன்!

அகர் மரங்கள் விற்பனையில் ரூ.45 லட்சம் லாபம் எதிர்பார்க்கிறேன்!

1


PUBLISHED ON : ஜூன் 27, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 27, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக விவசாயிகளுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத, அகர் மரம் பயிர் செய்து வரும், சேலம் மாவட்டத்தில் உள்ள, மலையடிவார ஊரான கருமந்துறையில் வசித்து வரும், ஓய்வு பெற்ற தோட்டக்கலை உதவி அலுவலர் ஹரிதாஸ்:

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம், அகர் மரம். சந்தன மரத்தை விட, இது பல மடங்கு கூடுதல் மதிப்பு கொண்டது. இந்த மரத்துக்கு சர்வதேச அளவில் சந்தை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கு.

இன்றைய சந்தை நிலவரப்படி, 10 - -12 ஆண்டுகள் கடந்த அகர் மரம், அதோட தரத்தை பொறுத்து குறைந்தபட்சம், 35,000 ரூபாயில் இருந்து அதிகபட்சம், 1 லட்சம் ரூபாய் வரை விலை போகுது.

இந்த மரத்தை மூலப்பொருளாக பயன்படுத்தி, உயர்ரக வாசனை திரவியங்கள், அகர் பத்திகள், விலையுயர்ந்த சாம்பிராணி, சோப்புகள் மற்றும் சில மருந்து பொருட்களும் தயாரிக்கின்றனர்.

சந்தன மரம் வளர்த்தால், குறைந்தபட்சம், 20 ஆண்டுகளுக்கு பின் தான், அதை அறுவடை செய்து வருமானம் பார்க்க முடியும்; ஆனால், அகர் மரம் வளர்த்தால், 10- -- 12 ஆண்டுகளில் வருமானம் பார்க்கலாம்.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், இயற்கையாகவே அதிக எண்ணிக்கையில் அகர் மரங்கள் வளர்கின்றன.

அந்த பகுதிகளில், எட்டு ஆண்டுகள் கடந்த அகர் மரங்களில் காற்றின் வாயிலாக பூஞ்சைகள் ஊடுருவும். அதனால் அந்த மரங்களோட தண்டு பகுதியில், ஆங்காங்கே வட்ட வடிவில் சிப்ஸ் மாதிரி ஒரு தன்மை உருவாகும்.

அதை, 'அகர்'னு சொல்லுவாங்க. அதுமாதிரி அகர் உருவான மரங்களை அறுவடை செய்து, அதிக அகர் தன்மை கொண்ட வட்டவடிவ பகுதிகளை மட்டும் தனியாக நறுக்கி எடுத்து, வாசனை திரவியங்கள், ஊதுபத்திகள், சாம்பிராணி, விலை உயர்ந்த குளியல் சோப்புகள், மருந்து பொருட்கள் தயார் செய்ய பயன்படுத்துகின்றனர்.

கடந்த, 10 ஆண்டிற்கு முன், என் மகன் கர்நாடகாவுக்கு வேளாண் சுற்றுலா சென்றிருந்த போது, அங்க உள்ள ஒரு நர்சரியில் இருந்து, 200 அகர் மர நாற்றுகளை வாங்கி வந்தார்.

இயற்கை விவசாயத்தில் பயிர் செய்தால் தான் இது வெற்றிகரமாக விளையும்.

கர்நாடகாவில் அகர் பவுண்டேஷன்னு ஒரு நிறுவனம் இருக்கு. அவர்களிடம் விற்பனை செய்ய இருக்கிறோம். ஒரு மரத்துக்கு குறைந்தபட்சம் 35,000 ரூபாய் கிடைத்தாலே, 170 அகர் மரங்கள் வாயிலாக, 59 லட்சத்து 50,000 ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கு.

சாகுபடிக்கான செலவுகள் போக, 45 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.

அகர் மரங்கள் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், சோதனை முயற்சியாக, முதல் கட்டமாக, தங்களோட தோட்டத்தில் மற்ற மரங்களுக்கு இடையில் 50- - 100 அகர் நாற்றுகளை பயிர் செய்யலாம்.தொடர்புக்கு: 98946 84507






      Dinamalar
      Follow us