/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இருக்கும் வரை பெற்றோரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்!
/
இருக்கும் வரை பெற்றோரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்!
இருக்கும் வரை பெற்றோரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்!
இருக்கும் வரை பெற்றோரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்!
PUBLISHED ON : ஏப் 17, 2024 12:00 AM

எழுத்து, வாசிப்பு, இசை, ஓவியம், யோகா என்று இளைஞர்களுக்கு இணையாக பயங்கர ஆக்டிவாக இருக்கும் கோவையை சேர்ந்த, 86 வயது மூதாட்டியான, பாலம் சுந்தரேசன்:
நான் எழுதிய கதைகள், சில முன்னணி இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. சிறுவர் இதழ்களிலும் கதைகள் எழுதியுள்ளேன். திருமணத்துக்கு பின், எழுத்து காணாமல் போய் விட்டது.
குடும்பம், குழந்தைகள் என்றானது. நானும், என் கணவரும் வேலை, குடும்பப் பொறுப்புகளில் இருந்தெல்லாம் ஓய்வு பெற்ற பின், மீண்டும் எழுத துவங்கினேன்.
அப்போது, என் பேத்தி அனுஷா, 'பிளாக்' எனும் வலைப்பதிவில் எழுத சொன்னாள். அப்படித் தான் 2010-ல் இருந்து பிளாக்கில் எழுத துவங்கினேன். எண்ணங்கள், கற்பனைகள், கதைகள், ரெசிப்பீஸ் என, எல்லாவற்றையும் அதில் தமிழ், ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன்.
நான் ஒரு நல்ல வாசகி. எனக்கு கிளாசிக் இலக்கியங்கள் மிகவும் பிடிக்கும். நான் எழுதும் கதைகள் பெரும்பாலும் என்னை சுற்றியிருக்கும் வாழ்க்கையாக இருக்கும்.
சாதாரண விஷயங்கள்கூட தாக்கத்தை ஏற்படுத்தும். அது போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, என் கற்பனையை கலந்து எழுதுவேன்.
இந்த வயதிலும் நான் சுறுசுறுப்பாக இருக்க, இந்த உடற்பயிற்சிகள் முக்கிய காரணம். ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். வாட்டர் கலர், பென்சில் ஸ்கெட்சிங் என்று செய்வேன்.
இப்போது பிரெஞ்சு மொழி கற்று கொண்டிருக்கிறேன். பைத்தானில் கம்ப்யூட்டர் கோடிங் செய்வேன். இசையிலும் பொழுது கரையும். என் கணவர் இருந்த வரை திருவையாறு உற்சவத்துக்கு, கச்சேரிகளுக்கு எல்லாம் சென்று பாடுவோம்.
என் முதுமை காலத்தில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், நிம்மதியாக இருக்கிறேன். தினமும் தியானம் செய்வது, என் மன நலத்தையும் சிறப்பாக வைத்திருக்கிறது.
நம் எல்லாருக்குள்ளும் நல்ல விஷயங்கள் நிறைய இருக்கும். கருணை, இரக்கம், உதவும் மனப்பான்மை போன்ற அந்த நல்ல விஷயங்களை முன்னிறுத்தினால், வாழ்க்கையில் நேர்மறை எண்ணம் வளரும். அதன் பிரதிபலிப்பில், இந்த உலகமே அழகாகத் தோன்றும்.
பிள்ளைகளுக்கு ஒன்றே ஒன்றை சொல்லி கொள்கிறேன். வயதான பெற்றோர் இன்னும் எத்தனை நாட்கள் உங்களோடு இருப்பர் என்று தெரியாது. இருக்கும் வரை அவர்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.

