/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ரூ.25 லட்சம் காரை விட மகள் தந்த பைக் தான் உசத்தி!
/
ரூ.25 லட்சம் காரை விட மகள் தந்த பைக் தான் உசத்தி!
PUBLISHED ON : ஆக 20, 2024 12:00 AM

பிரபல நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்: எல்லாருமே, மகள் பிறக்குற வீட்டில் மகாலட்சுமியே பிறக்கிறாள்னு தான் பீல் பண்ணுவாங்க.
எனக்கு மகள் பிறக்கணும்னு இறைவன்கிட்ட வேண்டிக்கிட்டேன். அதை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி.
காட்டாறாக திரிஞ்சுகிட்டிருந்த என்னை கரைகளுக்குள்ள ஓடக்கூடிய ஆறா மாற்றியது என் மகள் ஐஸ்வர்யா தான்.
நான் என் மகளை குழந்தையா பார்த்தாலும், என் மகள் எனக்கு அம்மாவாக இருந்து என்னை அவங்க மகனை போல வழிநடத்துறாங்க.
என் மகள், 'டப்பிங்' ஆர்ட்டிஸ்ட் ஆகப் போறேன்னு சொன்னாங்க. எனக்கு வாழ்க்கை கொடுத்த, சோறு போட்ட, இப்பவும் சோறு போட்டுகிட்டிருக்கிற தொழிலாச்சே... அதே துறைக்கு மகளும் வர நினைத்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்.
அப்பா என்பதாலோ, நடிப்பு, டப்பிங்கில் நான் சீனியர் என்பதாலோ சும்மா சும்மா கருத்து சொல்றதோ, 'அட்வைஸ்' பண்றதோ செய்ய மாட்டேன்.
அவங்களா என்கிட்ட கருத்து கேட்டால் மட்டும் தான் சொல்வேன்.
சிறுவயது முதலே, 'என்பீல்டு புல்லட்' ரொம்ப பிடிக்கும். அப்பல்லாம் மிலிட்டரியில் இருந்து ஏலத்துல 8,000 ரூபாய்க்கு எடுத்துட்டு வந்து, பசங்க, 'ரெடி' பண்ணுவாங்க. அந்த சத்தத்துல என்னவோ அப்படியொரு ஈர்ப்பு. இன்று எத்தனையோ பவர்புல் பைக் வந்தாலும் அந்த பைக் மேல் உள்ள ஆசை இன்னும் குறையவே இல்லை.
இதை தெரிந்து கொண்ட என் மகள், அவங்க சம்பாதித்த பணத்தில் அவங்க பெயரில் பைக், 'புக்' செய்து, திடீர்னு ஒருநாள் என் கண்ணை கட்டி கூட்டிட்டு போய் பைக் முன்னாடி நிறுத்தியபோது அழுதுட்டேன். அதன்பின் பல காலம் அந்த பைக்கில் தான் சுத்திக்கிட்டிருந்தேன்.
என் மனைவி கூட, '25 லட்சம் ரூபாய் கொடுத்து கார் வாங்கியிருக்கீங்க. அதை விட்டுட்டு 1.50 லட்சம் ரூபாய் பைக்கில் சுத்துறீங்களே'ன்னு கேட்டாங்க. 'எனக்கு காரை விட, என் மகள் கொடுத்த பைக் தான் உசத்தி' என்று சொல்லி சுத்திட்டிருப்பேன்.
என் மகளும், மாப்பிள்ளை ராகுலும் சிறு வயது முதலே பிரெண்ட்ஸ். ரெண்டு பேருக்கும் பிடித்திருந்ததால், சந்தோஷமாக திருமணம் செய்து கொடுத்தேன். மகளை திருமணம் செய்து கொடுத்து, புகுந்த வீட்டுக்கு அனுப்புற உணர்வு, எல்லா தகப்பன்களுக்கும் பெருமை கலந்த மனக்கிலேசம் தான்.
ஆனால், அந்த பிரிவோ, வருத்தமோ பாதிக்காத அளவுக்கு என் சம்பந்தி வீட்டாரும், மாப்பிள்ளையும் அன்பை பொழியுறாங்க.
ஒரு தகப்பனுக்கு இதை விட வேறென்ன வேண்டும். இன்னும் சில நாட்களில் கிடைக்கப் போற தாத்தா புரமோஷனுக்காக காத்துட்டு இருக்கேன்.