தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/'கடின உழைப்பால் தொழிற்கூடமாக மாறிய மாட்டு கொட்டகை!'

'கடின உழைப்பால் தொழிற்கூடமாக மாறிய மாட்டு கொட்டகை!'

'கடின உழைப்பால் தொழிற்கூடமாக மாறிய மாட்டு கொட்டகை!'


PUBLISHED ON : நவ 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாட்டுக் கொட்டகையை தொழிற்கூடமாக மாற்றி, ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் தொழிலதிபராக உயர்ந்துள்ள, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த கவிதா:

நான் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்துள்ளேன். ஆரம்பத்தில், வீட்டுக்கு அருகில் உள்ள நுால் மில்லில் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். மாதம் 3,000 ரூபாய் சம்பளம் தான் கிடைக்கும்.

கணவர் விவசாய வேலைகளுக்காக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். தினசரி செலவுகளை சமாளிப்பதே பெரிய போராட்டமாக இருந்தது. என் இரு பெண் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள எவரும் இல்லாததால், வீட்டில் இருந்தபடியே கைத்தொழில் செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.

எனக்கு சிறு வயது முதலே தையல் தெரியும். அம்மா வீட்டில் இருந்த பழைய தையல் இயந்திரத்தை எடுத்து வந்து, பயன்படுத்த துவங்கினேன். வீட்டுக்கு பின் இருந்த மாட்டு கொட்டகையை சுத்தம் செய்து, தையல் இயந்திரத்தை அங்கேயே வைத்து தைக்க துவங்கினேன்.

பக்கத்தில் இருந்த ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து, பைகள் தைத்துக் கொடுக்க வாய்ப்பு கிடைத்தது. மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. கொரோனா ஊரடங்கு சமயத்தில், 'ஆர்டர்'கள் நின்று போயின.

மற்ற நிறுவனங்களுக்கு கூலிக்கு தைத்து கொடுப்பதற்கு பதிலாக, நாமே பருத்தி பைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்து, வீட்டிற்கு பக்கத்திலேயே தொழிற்சாலை அமைத்து, தேவையான இயந்திரங்களை வாங்கி, சொந்தமாக தொழில் துவங்கினேன்.

மூத்த மகள், 'கம்ப்யூட்டர் டெக்னாலஜி' படித்து விட்டு வேலைக்கு செல்கிறார்; இரண்டாவது மகள், 'பேஷன் டிசைனிங்' முடித்து விட்டு, என் தொழிலை கவனித்துக் கொள்கிறார்.

மகள்கள் வந்த பின், 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' வழியாக ஆர்டர்கள் எடுப்பது, சமூக வலைதள பக்கங்களை கையாளுவது, 'மெயில்'களுக்கு பதில் அனுப்புவது என அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொள்கின்றனர். சிறு வியாபாரிகள் துவங்கி, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை ஆர்டர் எடுத்து, பைகள் செய்து கொடுத்து வருகிறோம்.

பருத்தி துணிகளை மட்டுமே பயன்படுத்தி பைகள் தயாரிப்பதால், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், நீண்டகாலம் உழைக்க கூடியதாகவும் இருக்கும். இப்போது எங்கள் தொழிலின் ஆண்டு வருமானம் 30 லட்சம் ரூபாய்; 10 பெண்கள் வேலை பார்க்கின்றனர்.

எந்த ஒரு தொழிலையும் நேசித்து, அர்ப்பணிப்புடன் செய்தால் வெற்றி நிச்சயம். விடாமுயற்சியுடன் உழைப்பும், மன உறுதியும் இருந்தால் மாட்டு கொட்டகையும் தொழிற்கூடமாக மாறும் என்பதற்கு என் உழைப்பே சான்று!Image 1647281

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us