/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
யார் உங்களை நம்பாவிட்டாலும் உங்களை நீங்கள் முதலில் நம்புங்கள்!
/
யார் உங்களை நம்பாவிட்டாலும் உங்களை நீங்கள் முதலில் நம்புங்கள்!
யார் உங்களை நம்பாவிட்டாலும் உங்களை நீங்கள் முதலில் நம்புங்கள்!
யார் உங்களை நம்பாவிட்டாலும் உங்களை நீங்கள் முதலில் நம்புங்கள்!
PUBLISHED ON : ஜன 22, 2025 12:00 AM

'செம்மண்' என்ற புதுமையான கலைப்படைப்பை, சமீபத்தில் சென்னையில் அரங்கேற்றிய நடனக் கலைஞரான கிரிஜா ஜெயராஜ்: நான் பிறந்தது, இலங்கையின் மாத்தளை எனும் இடத்தில். 1984ல் என் 3 வயதில், சென்னைக்கு வந்து ஐந்து ஆண்டுகள் வசித்தோம். 1989ல் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தோம். கல்வி கற்றது ஆஸ்திரேலியாவில் தான்.
பரதநாட்டியத்தில் எனக்கு நிறைய குருக்கள் உள்ளனர். நேர்த்தியான முறையில் எப்படி நடனமாடுவது எனும் வழிகளை கற்றுத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், என், 'சாஸ்திரம் டிவி' வாயிலாக பலரையும் பேட்டி கண்டேன்.
அதுமட்டுமல்ல, ஒரே பாணியில் நடனமாடுவதை தவிர்த்து, ஒரு புதிய முறையை கையாள எண்ணினேன். இதன்படி, 2005ம் ஆண்டில் அரங்கேற்றிய, 'நாட்டிய வந்தனம்' தான் என் முதல் நிகழ்ச்சி.
பரதநாட்டியக் கலைஞர் ஒருவரும், 'ஹிப் ஹாப்' நடனக் கலைஞர் ஒருவரும் எந்தவொரு முன்னேற்பாடும் இல்லாமல் எதிரெதிராக நின்று, தத்தமது பாணியில் நடனமாடியது பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்து, 'யாத்ரா' எனும் பெயரில் உருவான நாட்டியம், பெங்களூரு, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் மேடையேற்றப்பட்டது. இதில், 180 கலைஞர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவில், கலையார்வத்தில் நாட்டிய நிகழ்ச்சிகளை பெரும்பாலானோர் பார்க்கின்றனர். வெளிநாடுகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும், நம்மை அடையாளப்படுத்தும் நோக்கத்தில் தான் நடத்தப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, இந்த நிகழ்வுகளுக்கு செல்வோர் ஒரு ஆலயத்துக்குச் செல்வதைப் போல் செல்வர். நடனத்தையும், சினிமாவையும் முன்னிலைப்படுத்தி நடனம், மேடை நடிப்பு, சினிமா என, மூன்றுமே ஒன்றாக இணையும்படியான ஒரு கலைப்படைப்பை நாங்கள் உருவாக்கினோம்.
ஏழு நாடுகளைச் சேர்ந்த திறமை வாய்ந்த 140க்கும் மேற்பட்ட கலைஞர்கள், 'செம்மண்' குழுவில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த பிரமாண்ட நிகழ்ச்சி, சமீபத்தில் சென்னை ஆர்.ஆர்.சபாவில் அரங்கேறியது.
செம்மண் உருவாக்கத்தை போல், இதைவிட பிரமாண்ட முறையில், 360 டிகிரிக்கு நம்மை சுற்றி திரையும், மத்தியில் நாம் அமர்ந்து ரசிக்கிற அற்புதமான அனுபவத்தை தரும்படியான படைப்பையும் உருவாக்க விரும்புகிறேன்.
இதற்கான பல யோசனைகள் என்னிடம் உள்ளன. திரைப்படம் இயக்கவும் விரும்புகிறேன்.
யார் உங்களை நம்பினாலும் நம்பாவிட்டாலும், உங்களை நீங்கள் முதலில் நம்புங்கள். ஏனெனில், நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான்!