/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அடுத்த 2 ஆண்டில் ரூ.10 கோடிக்கு 'பிசினஸ்' இலக்கு!
/
அடுத்த 2 ஆண்டில் ரூ.10 கோடிக்கு 'பிசினஸ்' இலக்கு!
PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

விவசாயிகளையும், வியாபாரிகளையும் இணைக்கும், 'பேக்ரோ ஆப்' நிறுவனரான, நெய்வேலியைச் சேர்ந்த அஷ்டலட்சுமி:
'பி.இ., எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன்' படித்து முடித்தேன். படிக்கும்போதே தமிழக அரசின் இளம் தொழில் முனைவோர் பயிற்சியில் பங்கேற்று, 45 நாட்கள் கோர்ஸ் முடித்தேன். அதன்பின் 2017ல், 'உணவு பொருள் வீணாவதை தடுக்கும் ஐடியாக்களை அனுப்பலாம்' என, ஒரு 'ஸ்டார்ட் அப் சேலஞ்ச்'சை மத்திய அரசு அறிவித்தது.
'விவசாயி உற்பத்தி செய்கிற தானியம் தாமதமின்றி வியாபாரியிடம் சேர்ந்துட்டால், உணவு பொருள் வீணாகாது' என்று ஒரு பேப்பர் ஒர்க் செய்து, 'பேக்ரோ' என்று பெயர் வைத்து அனுப்பி வைத்தேன்.
தமிழகத்தில் இரண்டு ஐடியாக்கள் தேர்வாகின. அதில் ஒன்று என்னுடையது. ஆமதாபாதில் உள்ள, 'ஐகிரியேட்' நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சி வழங்கியது மத்திய அரசு.
அதன்பின், பெரியகுளம் சென்று சிறு அலுவலகம் அமைத்து, விவசாயிகள் பலரை சந்தித்து பேசினேன். சிறிது சிறிதாக டெக்னாலஜியை டெவலப் செய்தேன். 'இன்டர்ன்ஷிப்'பில் சில மாணவர்களை பணியில் அமர்த்தினேன். 2023ல் மார்க்கெட்டிங்கை துவக்கினேன்.
விவசாயிகள், 044 - 6908 7878 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தவுடன், எங்கள் பிரதிநிதிகள் பேசி, 'ஆப்'பில், 'அப்டேட்' செய்வர் அல்லது விவசாயியே பொருள் குறித்த தகவலை, விலையுடன் ஆப்பில் பதிவு செய்யலாம்.
வியாபாரிக்கு பொருள் பிடித்திருந்தால் அதை, 'மார்க்' செய்வார். எங்கள் பிரதிநிதி உடனே வியாபாரியை தொடர்பு கொண்டு விற்பனையை முடிப்பார். பணம் எங்கள் கணக்கிற்கு வந்துவிடும். பொருளை ஏற்றி இறக்க வாகனங்கள், தொழிலாளர்களையும் கனெக்ட் செய்து வைத்திருக்கிறோம்.
உடனே, பக்கத்தில் இருக்கிற தொழிலாளர்களுக்கும், லாஜிஸ்டிக் நிறுவனத்திற்கும் தகவல் செல்லும். பொருளை ஏற்றி முடித்ததும், தொழிலாளர்களுக்கான சம்பளம், பொருளுக்கான விலை எல்லாவற்றையும் அந்த இடத்திலேயே செட்டில் செய்து விடுவோம். வியாபாரி கைக்கு பொருள் சென்று சேரும் வரை, 'பாலோ' செய்தபடியே இருப்போம்.
இந்த பணிக்காக விவசாயிகளிடம் 500 ரூபாயும், வியாபாரிகளிடம் 500 ரூபாயும் கட்டணம் வாங்குவோம். அளவு எவ்வளவாக இருந்தாலும் எங்களுக்கான கட்டணம் அதுதான். இது, டன் கணக்கிலான பிசினஸ்!
தற்போது, 148 விவசாய விளைபொருட்களை, 'பேக்ரோ ஆப்' வாயிலாக வாங்கலாம்; விற்கலாம். 27,000 விவசாயிகளும், 5,000 வியாபாரிகளும் இந்த நிறுவனத்தின் வாயிலாக பரிவர்த்தனை செய்கின்றனர்.
அடுத்த இரு ஆண்டுகளில், 10 கோடி ரூபாய் பிசினஸ் இலக்கு வைத்துள்ளோம். இந்தியா முழுதும் இதை விரிவுபடுத்த வேண்டும்.