/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஓராண்டுக்கு ரூ.150 கோடிக்கு வர்த்தகம்!
/
ஓராண்டுக்கு ரூ.150 கோடிக்கு வர்த்தகம்!
PUBLISHED ON : அக் 31, 2025 12:00 AM

மும்பையை தலைமை யிடமாக கொண்டு, பூ ஜை பொருட்கள் மற்றும் ஆன்மிக புத்தகங்க ளை விற்பனை செய்யும், 'கிரி டிரேடிங் ஏஜன்சி'யை நடத்தி வரும், சென்னையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன்:
என் தந்தை ஸ்வர்ணகிரீஸ்வரன், 1950களில் மும்பையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சிறு வயதில் இருந்தே, ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
இதனால், இறை வழிபாட்டுக்கு தேவையான பாடல்கள், ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகங்களை அச்சிட்டு, 1951ல் மும்பையில் உள்ள மாட்டுங்கா பகுதியில், பக்தர்களுக்கு இலவசமாக கொடுக்க ஆரம்பித்தார்.
இறை பணிக்காக ஏதேனும் நிரந்தரமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், அதே பகுதியில் சிறிய பெட்டிக்கடை வைத்து, அதில் ஆன்மிக புத்தகங்கள் மட்டும் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
அத்துடன், களிமண்ணில் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள் மற்றும் நவராத்திரிக்கு தேவையான பொம்மைகளை வாங்கி, விற்பனை செய்தார்.
கடைக்கு தேவையானவற்றை வாங்கி, மும்பைக்கு அனுப்புவதற்கு வசதியாக, 1976ல் சென்னையில் ஒரு கிளையை துவக்கினார் அப்பா.
அதுவே, எதிர்காலத்தில் எங்களது விரிவாக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆன்மிக புத்தகங்களை தொடர்ந்து, பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.
மும்பையில், விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையடுத்து, பூஜை பொருட்களை, நாங்களே சென்னையில் தயாரிக்க ஆரம்பித்தோம்.
சிறிது சிறிதாக தமிழகம் முழுக்க ஆன்மிக நகரங்களில், புகழ் பெற்ற கோவில்கள் இருக்கும் ஊர்களில் கிளைகளை திறந்தோம். எங்கள் கடைகளை இணைக்கும் விதமாக, 1990ல், 'கிரி டிரேடிங் ஏஜன்சி' என்ற பெயரில், கம்பெனியாக பதிவு செய்தோம்.
உலகம் முழுக்க உள் ள பக்தர்களுக்கு தேவைப்படும் சுவாமி சிலைகள், வரலாற்று புத்தகங்கள், சிறுவர் புத்தகங்கள், சமையல் புத்தகங்கள் மற்றும் அனைத்து வகையா ன ஆன்மிக பொருட்களையும், ' ஆன்லைனில்' விற்பனை செய்து வருகிறோம்.
அதுமட்டுமல்லாது, 'போஜனம்' என்ற பெயரில், 'ரெடிமேட்' பொடி வகைகள், அப்பளம், காபி பொடி, சமையல் எண்ணெய், சிறுதானிய பவுடர் போன்றவற்றையும், நாங்களே தயாரித்து விற்பனை செய்கிறோம்.
தற்போது, மும்பையில், பிரதான கடை தவிர, ஆறு கிளைகள் உள்ளன; தமிழகத்தில், 20 கிளைகள் இருக்கின்றன.
மேலும், பெங்களூரு, புதுச்சேரி, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலும் கிளைகள் உள்ளன. உலகம் முழுதும், 35க்கும் மேற்பட்ட கடைகளில், ஓராண்டுக்கு, 150 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.

