தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ வெற்றிக்கு அடிப்படை தேவை மன உறுதியே!

வெற்றிக்கு அடிப்படை தேவை மன உறுதியே!

வெற்றிக்கு அடிப்படை தேவை மன உறுதியே!


PUBLISHED ON : அக் 02, 2026 03:11 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2026 03:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடைச் சேர்ந்த, 31 வயதாகும், மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் அனுஸ்ருதி:

படித்து முடித்து, நல்ல வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எங்கள் வீட்டின் மனநிலை. அதனால் இன்ஜினியரிங் படித்தேன். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, நிறைய தேர்வுகளை எழுதினேன். ஆனால், சிறு வயதில் மனதில் உருவான ஒரு ஆசை, அப்படியே தொழில் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கி விட்டது; அதுதான் திருப்புமுனை!

என் அம்மா நன்கு சமைப்பார்; எல்லாமே, இயற்கையான, ஆரோக்கியமான உணவு வகைகளாக இருக்கும். அதனால், சிறு வயதிலேயே சமையல் மீது ஆர்வம் ஏற்பட்டது. மக்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற யோசனை வந்தது.

திருமணத்திற்கு பின், வீட்டில் சிறிது சேமிப்பு பணம் இருந்தது; அதை வைத்து, சிறிதாக சமையல் பொடிகள் செய்யும் தொழிலை ஆரம்பித்தேன்.

தொக்கு வகைகள், மசாலா பொருட்கள், சத்து மாவு வகைகள், சூப் பவுடர், காய்கறி பவுடர் வகைகள், மால்ட் வகைகள் என்று, செயற்கை நிறமிகள், ரசாயனங்கள் எதுவும் சேர்க்காமல், சுத்தமாகவும், தரத்துடனும் வீட்டிலேயே செய்து, விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

அம்மா கற்றுக் கொடுத்தது எல்லாமே, இப்போது எனக்கு உதவியாக இருக்கிறது... சொல்லப்போனால், அம்மா தான் எனக்கு குரு!

பொருட்கள் தரமாக இருந்ததால், வாடிக்கையாளர் அதிகமாயினர்.

அதனால், 2020ல், 'விருட்சம் நேச்சுரல் புட்ஸ்' என்ற பெயரில் கம்பெனி ஆரம்பித்தேன். இப்போது என்னுடன், 22 பெண்கள் வேலை பார்க்கின்றனர். எல்லாருடனும் தோழியாகவும், சகோதரியாகவும் பழகி வருகிறேன்.

என் வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலைகள் வரும்போது, மன உறுதியுடன் சந்தித்து கடந்து வருவது, ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.

எனக்கு திருக்குறள் மிகவும் பிடிக்கும். 'வெற்றிக்கு அடிப்படையானது முதலில் மன உறுதி. மற்ற எல்லாம் அதற்கு பின் தான்' என்று அர்த்தம் உள்ள குறள், எனக்கு மிகவும் ஊக்க சக்தியாகவே இருக்கும்!

தற்போது, 25க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறேன். மக்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களைத் தயாரிக்கிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து, கவனமாக செயல்படுகிறேன். நிறைய குழந்தைகள் சாப்பிடுகின்றனரே என்ற எச்சரிக்கையும் இருக்கிறது.

ஆண்டு வருமானம், 7 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. என் தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தி பார்த்த பலரும், நேர்மறையான கருத்துக்களை கூறும்போது, செய்யும் வேலையை சரியாகவே செய்கிறேன் என்ற மனநிறைவும், சந்தோஷமும் கிடைக்கிறது. அது, பணத்தால் கிடைக்காதது!

தொடர்புக்கு

90808 94747

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us