/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நான் சம்பாதித்து மற்றவர்களுக்கு கொடுக்க தான் நினைப்பேன்!
/
நான் சம்பாதித்து மற்றவர்களுக்கு கொடுக்க தான் நினைப்பேன்!
நான் சம்பாதித்து மற்றவர்களுக்கு கொடுக்க தான் நினைப்பேன்!
நான் சம்பாதித்து மற்றவர்களுக்கு கொடுக்க தான் நினைப்பேன்!
PUBLISHED ON : அக் 08, 2024 12:00 AM

நடிப்பு துறையில், 45 ஆண்டுகளை கடந்திருக்கும் பிரபல நடிகை வடிவுக்கரசி: வேலை செய்து தான் சாப்பிடணும் என்ற நிலை இல்லாமல், ஒரு காலத்தில் எங்கள் குடும்பம் செழிப்பாக இருந்தது; நல்லா வாழ்ந்தோம்.
விவசாயம், தோட்டம், தோப்புன்னு நிறைய இருந்தன. இயக்குனர் ஏ.பி.நாகராஜன் என் பெரியப்பா. எங்க அப்பா, தேவர் பிலிம்ஸ் படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்திருக்கிறார்.
ஆனாலும் நடிக்கும் ஆர்வம் எனக்கு இல்லை. பெரியப்பா இறப்பு எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு. கல்லுாரி படிப்பை அப்படியே விட்டு விட்டு, வேலை செய்தால் தான் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்.
கன்னிமாரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் சூப்பர்வைசர் வேலைக்கு அப்ளிகேஷன் கொடுப்பதற்காக, பாஸ்போர்ட் சைஸ் அளவில் என் புகைப்படத்தை பிரின்ட் போட்ட ஸ்டூடியோவில் பார்த்த பாரதிராஜா, எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளித்தார்.
அப்போது முதல் நடித்து வருகிறேன். பெரிய நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படங்களில் நடித்தாலும், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வருமானம் இல்லை.
நாம் வாழ்வதற்கு பணம் வேண்டும். எனக்கு சம்பாதித்து கொடுக்க யாருமில்லை; அப்படியே கொடுத்தாலும் அதை வாங்கிக் கொள்ளும் ஆள் இல்லை.
இந்த வயதிலும் நான் சம்பாதித்து, மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தான் நினைப்பேனே தவிர, நான் யாரிடமும் சென்று, 'பணம் வேண்டும்' என்று கேட்டு நிற்க மாட்டேன்.
நான் உழைக்க தயாராக இருக்கிறேன்; உழைத்து கொண்டும் இருக்கிறேன்.
எந்த பாகுபாடும் இல்லாமல், எல்லா தரப்பட்ட கலைஞர்களுடன் இணைந்து வேலை செய்கிறேன்.
எந்த இயக்குனராக இருந்தாலும் கூச்சப்படாமல், 'சின்ன கதாபாத்திரம் இருந்தாலும் கொடுங்க; ரெண்டு வேளை பணியாக இருந்தாலும் பரவாயில்லை' என்று கூறி விடுவேன்.
அதனால் தான் இந்த வயதை மறந்து, பொருளாதார தேவைக்காக ஷூட்டிங் போறேன். எனக்கான வேலையை நான் தான் செய்யணும் என்ற கொள்கை உடையவள் நான்.
எல்லா வயதிலும் போராட்டம் இருக்கும்; எல்லார் வாழ்க்கையிலும் போராட்டம் இருந்துட்டே இருக்கும். 'முதல் மரியாதை' படத்தை, 'டிவி'யில் பார்க்கும் போது, 'வடிவுக்கரசி இப்ப என்ன பண்றாங்க?' என்ற கேள்வி எழும்.
ஆனால், வீட்டுக்குள், 'டிவி' சீரியலில் பார்க்கும் போது, 'அட இன்னும் நடிச்சுட்டு தானே இருக்காங்க... இன்னும் வயசாகலையே'ன்னு நினைப்பாங்க.
வயதை குறித்து யோசிக்காமல் வேலை செய்தபடியே இருந்தால் போதும்... வாழ்க்கை போராட்டம் இயல்பாகி விடும்.