தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ நான்கு பேரையாவது படிக்க வைக்கணும்!

 நான்கு பேரையாவது படிக்க வைக்கணும்!

 நான்கு பேரையாவது படிக்க வைக்கணும்!


PUBLISHED ON : பிப் 10, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 10, 2026 03:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடும் வறுமைக்கு இடையிலும் அயராது படித்து, முன்னேறிய, தேனியை சேர்ந்த, 21 வயதாகும் நாகதேவி:

என் சிறு வயதிலேயே என் தந்தை பிரிந்து சென்று விட, அம்மாவின் பராமரிப்பில் தான் நானும், அண்ணனும் வளர்ந்தோம். அம்மா அதிகம் படிக்காதவர்.

வீட்டு வேலைக்கு சென்ற அம்மாவால், அண்ணனை ஏழாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. அதனால், என்னை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

நா ன் பள்ளியில் படிக்கும்போது, அண்ணனுக்கு திருமணம் ஆகி, தன் குடும்பத்துடன் திருப்பூரில் குடியேறி விட்டார். பின், எனக்கு எல்லாம் அம்மா தான். அரசு பள்ளியில் படித்தேன். வீட்டில் மின்சாரம் கிடையாது; கடனும் அதிகம்.

பள்ளி படிப்பு முடிந்ததும், பி.காம்., - சி.ஏ., படிக்க ஆசைப் பட்டு, அம்மாவிடம் கூறியதற்கு, 'இன்னும் எத்தனை வீட்டுக்கு வேண்டுமானாலும் வேலைக்கு போறேன்; நீ, ஆசைப்பட்டதை படி...' என்றார்.

கா லையில் சீக்கிரமே எழும் அம்மா, ஒவ்வொரு வீடாக சென்று வேலையை முடித்து வர, இரவாகி விடும்.

வரும்போது, அவ்வளவு சோர்வாக வருவார். அதை பார்க்கும்போது, மனம் துடிக்கும். நல்லா படித்து, நல்ல வேலைக்கு போய் அம்மாவை பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வை ராக்கியம், நாளுக்கு நாள் அதிகரித்தது.

கஷ்டப்பட்டு, என்னை பொறியியல் படிப்பில் சேர்த்தார். கடன் வாங்கி, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கல்லுாரி க ட்டணம் கட்டினார். ஆனால், மூன்றாமாண்டு அவரால் சமாளிக்க முடியவில்லை.

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் வாயிலாக, எனக்கு படிக்க உதவி கிடைத்தது. கல்லுாரி படிப்பை முடித்ததும், தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

அந்த தகவலை அம்மாவிடம் கூறியதும், சந்தோஷத்தில் அழுதார். இப்போது அம்மாவை கஷ்டப்படாமல், நல்ல படியாக பார்த்துக் கொள்கிறேன்.

வேலை கிடைத்ததும், என் அம்மாவிடம், 'வீட்டு வேலை பார்க்க வேண்டாம்' என்று சொல்லி விட்டேன். ஆனாலும், சும்மா இருக்க பிடிக்காமல், ஒரே ஒரு வீட்டில் மட்டும் வேலை பார்த்து வருகிறார். என் முதல் சம்பளத்தை கையில் வாங்கிய அந்த நிமிடத்தை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

எ னக்காக, அம்மா வாங்கியிருந்த கடன்களை அடைத்து விட்டேன். ஆனால், வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக, மேற்படிப்பு படித்து வருகிறே ன்.

நான் படிக்க வசதியில்லாமல் நின்றபோது, எனக்கு உதவி கிடைத்தது போல, நான்கு பேரையாவது படிக்க வைக்கணும்; அதுதான் என் லட்சியம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us