தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ 'காபி ஷாப்' ஆரம்பித்து வளர்த்தெடுக்க வேண்டும்!

'காபி ஷாப்' ஆரம்பித்து வளர்த்தெடுக்க வேண்டும்!

'காபி ஷாப்' ஆரம்பித்து வளர்த்தெடுக்க வேண்டும்!


PUBLISHED ON : ஜூன் 17, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியா முழுக்க லாரியில் பயணித்தபடியே, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வரும், நாமக்கல் மாவட்டம், தத்தாதிரிபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரேவதி: என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில் தான், முதன் முறையாக கார் ஓட்ட கற்றுக் கொண்டேன்.

ஒரு கட்டத்தில், அவருடைய உயிரை காப்பாற்ற, நான் கற்றுக் கொண்ட ஓட்டுநர் பயிற்சி தான் உதவியது. கணவருக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்ட சூழலில், ஆம்புலன்ஸ் அழைத்தும் வரவில்லை.

ஆட்டோவும் வராத சூழலில், கணவரின், 'மாருதி 800' காரில், நானே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அதற்கு சில நாட்கள் முன் தான், ஓட்டுநர் பயிற்சியை நிறைவு செய்திருந்தேன்.

சரியான நேரத்தில் சென்றதால், அவருடைய உயிரை காப்பாற்ற முடிந்தது. அந்த வினாடியே ஓட்டுநர் தொழில் மீது எனக்கு பேரார்வம் வந்துவிட்டது. அடுத்தடுத்து வாகனங்கள் இயக்க கற்றுக் கொண்டேன்.

தற்போது, 16 சக்கரங்கள் உள்ள லாரி வரை இயக்கி வருகிறேன். நாமக்கல் மாவட்டத்தில் முதன்முதலில், 'ஹெவி லைசென்ஸ்' எடுத்த பெண் நான் தான்.

அந்த சமயத்தில் தான் என் கணவரின் தொழில் மிகவும் நஷ்டத்தில் இயங்கியது. அப்போது எங்களிடம் இரண்டு லாரிகள் இருந்தன.

அவற்றை விற்கும் சூழல் ஏற்பட்டபோது, 'அவற்றை ஏன் விற்க வேண்டும்? நீங்கள் ஒரு வண்டியை இயக் குங்கள். நான் ஒரு வண்டியை இயக்குகிறேன்' என்று கணவரிடம் கூறினேன்.

என் இரு மகன்களின் பள்ளியில், அனைவருக்கும் நான் ஒரு ஓட்டுநர் என்பது தெரியும். எனவே, அவர்களை இன்னும் கூடுதலாக கவனமெடுத்து பார்த்துக் கொள்கின்றனர்.

நான் ஓட்டுநர் என்பதை, எல்லா இடத்திலும் என் மகன்கள் பெருமையாக சொல்லி வருகின்றனர். எங்கள் மகன்களின் மேற்படிப்பிற்காக இன்னும் அதிகமாக இயங்க வேண்டும்.

பெரும்பாலும், நாங்கள் வண்டியிலேயே தான் சமைத்து சாப்பிடுகிறோம். நான் வண்டி ஓட்டும்போது கணவரும், அவர் வண்டி ஓட்டும்போது நானும் வீடியோ எடுக்கிறோம்.

நானும், என் கணவரும் தனித்தனியாக செல்லும்போது, அருகில் இருக்கும் கிளீனர் தம்பிகளிடம், 'தம்பி இப்படி வீடியோ எடுங்கள்' எனக் கூறி, மொபைல் போனை கொடுத்து விட்டு எடுப்போம்.

வீடியோக்களை பார்த்துவிட்டு எதிர்மறையான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அவற்றை இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டு விட்டு, கடந்து போக பழகிக் கொள்ள வேண்டும்.

எப்போதும், ஓட்டுநர் தொழில் தான் எனக்கு முதன்மையாக இருந்திருக்கிறது. சொந்தமாக காபி ஷாப் ஆரம்பித்து, அதை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us