/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பல நாட்கள் கிச்சனிலேயே துாங்கியிருக்கேன்!
/
பல நாட்கள் கிச்சனிலேயே துாங்கியிருக்கேன்!
PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

சமையல் தொடர்பான சமூக வலைதளங்களில் பரபரப்புடன் இயங்கும், சென்னையை சேர்ந்த, 'செப்' செரூபா: எனக்கு சின்ன வயசுல இருந்தே, 'பேக்கிங்'கில் ஆர்வம் அதிகம். ஹோட்டல் மேனேஜ்மென்டில் பேக்கிங் செலக்ட் பண்ணி படிச்சேன்.
ஹோட்டல்னாலே 12-ல் இருந்து 14- மணி நேரம் வரை நிற்கணும். ஆனா, வேலையை பிடிச்சு பண்ணினா கஷ்டமெல்லாம் இஷ்டமாயிடும்.
புதுசா போகும்போது நமக்கு சொல்லிக் கொடுக்க மாட்டாங்க. நாமதான் தப்பு பண்ணி தப்பு பண்ணி சரி செய்து கொள்ள வேண்டும்... அவ்ளோதான். எனக்கு நிற்பது மட்டும்தான் கஷ்டமா இருந்தது. மற்றதெல்லாம், 'ஈசி'யா எடுத்துக் கொண்டேன்.
நான் கொஞ்சம் திக்கித் திக்கிப் பேசுவேன். ஸ்கூல், காலேஜ் வரைக்குமே என்னை கேலி பண்றது, என்னை மாதிரி பேசிக் காட்டுவதுன்னு எல்லாமே பண்ணியிருக்காங்க.
குக்கிங் வந்ததுக்கு இன்னொரு காரணம், நான் சமைக்கும்போது பேசணும்னு அவசியமில்லை; என் கைகள்தான் பேசும். அதுதான் எனக்கு சமையலில் ஆர்வம் வருவதற்குக் காரணம்.
இத்தனை வருஷத்துல எனக்கு, 2024ல் தான் நம்பிக்கை வந்திருக்கு. அது வர்றதுக்கு இவ்ளோ வருஷம் ஆகியிருக்கு. இப்ப நான் எனக்குள்ள, 'நீ பேசு, மத்தவங்க ரியாக்ட் பண்ணினா அது உன் தப்பில்லை. மத்தவங்க பேச ஒரு செகண்ட் எடுத்துக்கிறாங்கன்னா நீ ஐந்து செகண்ட் எடுத்துக்கிற அவ்ளோதான்'னு சொல்லிப்பேன்.
தனியார், 'டிவி'யில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில், என் அணியில் மூன்று போட்டியாளர்கள் இருந்தாங்க. 'அதுல ரெண்டு பேர் பைனல் போனா சந்தோஷமா இருக்கும்'னு தான் நெனச்சேன்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி சொல்லிக் கொடுக்கணும். அவங்களுக்கு சொல்லி கொடுக்கிறதுக்கு முன்னாடி நான் பிராக்டிஸ் பண்ணுவேன்.
இந்த ஸ்டெப்பை இன்னும் சுலபமா எப்படி சொல்லிக் கொடுக்கலாம்னு பார்த்து அவங்களுக்கு கற்றுக் கொடுப்பேன். போட்டி யாளர்கள் ஒவ்வொருவருக்கும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனா, முதல், இரண்டாவது இடத்துக்கு என் டீம் வரும்னு எதிர்பார்க்கவே இல்ல.
என் முதல் மாத சம்பளம் 8,000 ரூபாய். 'என்ன, 14 மணி நேரம் வேலை பார்க்கிறாய்... இவ்ளோதான் உன் சம்பளமா?'ன்னு ஒருநாளும் வீட்டில் கேட்டதில்லை. பல நாட்கள் கிச்சனிலேயே துாங்கியிருக்கிறேன்.
எங்கள் வீட்டில் அனைவருமே சேர்ந்து சமைப்போம். என் அண்ணன்களுக்கு திருமணமாகி, குழந்தைகளும் இருக்கின்றனர். அனைவருக்குமே அவர்களுக்கு பிடித்த கேக் வகைகளை செய்து கொடுப்பேன்.
பேக்கிங் தொடர்பான கன்சல்டிங் பண்றேன். கிளவுட் கிச்சன் வைத்திருக்கிறேன். இப்ப, 'மீடியா மேசன்ஸ்' என்ற யு டியூப் சேனலுக்கு ஒரு ஷோ பண்ணிட்டிருக்கேன்.

