தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/‘எங்கள் வாழ்க்கையே கேளிக்கை மீது தான் இருக்கிறது!’

‘எங்கள் வாழ்க்கையே கேளிக்கை மீது தான் இருக்கிறது!’

‘எங்கள் வாழ்க்கையே கேளிக்கை மீது தான் இருக்கிறது!’


PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யதார்த்தமான நடிப்பின் மூலம், தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் காளி வெங்கட்:

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலை பகுதியில் உள்ள கத்தாழம்பட்டி தான் என் சொந்த ஊர். சினிமாவுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத குடும்பம் என்னுடையது.

எங்கள் ஊர் திருவிழாவில் நவீன நாடகங்கள் போடுவர். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அவற்றில் நடிக்க ஆரம்பித்து விட்டேன். அதை பார்த்த நண்பர்கள், ‘மெட்ராசுக்கு போய் சினிமாவில் சேர்ந்து விடு’ என்று உசுப்பேத்தி விட்டனர்.

விவசாயம் செய்து கொண்டிருந்த அப்பாவிடம் சொல்லிவிட்டு, சென்னைக்கு வந்து விட்டேன். எப்படி வாய்ப்பு தேட வேண்டும்; யாரைப் பார்க்க வேண்டும் என்று எதுவுமே தெரியாது. ஆனால், முதலில் பிழைக்க ஒரு வேலை வேண்டும் என்பது மட்டும் புரிந்தது.

இதனால், நான் பார்க்காத வேலையே இல்லை. எந்த வேலையும் செய்ய தயங்காத மனசு தான், என்னை இதுவரை கொண்டு வந்திருக்க வேண்டும். கஷ்டப்பட்டு வேலைகள் பார்த்து, சென்னையில் 400 சதுர அடியில் ஒரு வீடு வாங்கியதும், இனி வந்த வேலையை பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன்.

எனக்கு சினிமாவுக் கான பாதையை உருவாக்கி தந்தவை குறும்படங்கள் தான். பல குறும்படங்களில் நடித்து சினிமாவுக்கு வந்தேன். தியேட்டருக்கு பெற்றோரை அழைத்து சென்று, நான் நடித்த படங்களை காண்பித்ததில், அவர்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.

வீட்டுக்கு யார் வந்தாலும், நாளிதழ்களில் என் புகைப்படங்கள் வந்திருந்ததை காட்டி, பெருமை அடித்துக் கொள்வது தான் பெற்றோரின் வேலை.

சினிமா, புரிந்து கொள்ள முடியாத மர்மம். யாருமே சினிமாவின் நுணுக்கத்தை கண்டுபிடிக்க முடியாது. வாழ்க்கையில் எல்லாருக்கும் கேளிக்கை ஒரு அங்கமாகத் தான் இருக்கிறது. எங்களுக்கு வாழ்க்கையே கேளிக்கை மீது தான் இருக்கிறது.

இன்றைக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகத் தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, இங்கு எத்தனை நாட்கள் நிலைத்து நிற்கிறோம் என்பது தான் வெற்றி. செய்யும் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது.

சினிமா என்பது, 24 கலைகளின் கூட்டாஞ்சோறு. இங்கு உண்மையாக இருப்பது, நேர்மையாக இருக்க முயற்சி செய்வது, திறமையுடன் உழைப்பது என இது தான் எனக்கு தெரிந்த வழி.

நமக்கு இப்போது தான் மக்கள் ஒரு நாற்காலி கொடுத்திருக்கின்றனர். இந்த நாற்காலியில் ஒழுங்காக உட்கார்ந்து பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

இங்கு போட்டி, பொறாமை எல்லாம் இல்லை; அனுபவமே பிரதானம். இந்த எண்ணங்கள் எல்லாமே, என்னுடன் பயணித்த மனிதர்கள் வாயிலாக கிடைத்தவை தான். அதேநேரம், இந்த வேலையை அதற்கு உண்டான நேர்மையுடன் செய்வது தான் என் இலக்கு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us