தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘மணல் கொள்ளையை

தடுக்க 10,000 மரங்கள்

வளர்த்துள்ளேன்!’

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதுார் தாமிரபரணி ஆற்றங்கரையில், 3 கி.மீ.,க்கு வனப்பகுதியை உருவாக்கியுள்ள, 57 வயதாகும் நாறும்பூநாதன்:

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம், திருப்புடைமருதுார் தான். ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அப்பா இறந்து விட்டதால், குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஆடு, மாடுகளுடன், விவசாயத்தையும் கவனிக்க ஆரம்பித்தேன்.

எனக்கு சிறு வயது முதலே மரம், செடி, கொடிகள் மீது ஈடுபாடு அதிகம். காரணம், அம்மா! அவர் மரங்களை மிகவும் நேசித்தார். எங்கள் ஊர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பெரும்பகுதி மணல் தான் உள்ளது. எங்கள் ஊர் மக்கள், தங்களின் சொந்த தேவைக்கு மணல் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

சில நாட்களில் சமூக விரோதிகளால் மணல் கொள்ளை அதிகரித்தது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்து, மறைந்த ரத்தினவேல் பாண்டியன் அய்யா, இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் மணல் கொள்ளையை தடுக்க, தன் வீட்டில் ஊர் மக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில், ‘தாமிரபரணி ஆற்றங்கரை முழுக்க மரங்களை வளர்த்து காடு உருவாக்கி, வனத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைத்து விட்டால், மணல் கொள்ளையை தடுத்து விடலாம்’ என்று முடிவானது. ஆனால், இதற்கு பலரும் சம்மதம் தெரிவிக்கவில்லை.

அதற்கு காரணம், ‘மணலில் மரங்கள் வளராது. மேலும், நம் ஊர் மக்கள் காலம் காலமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடு, மாடுகள் மேய்த்து வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் சென்று விட்டால், மேய்ச்சலுக்கு தடை விதித்து விடுவர்’ என்றனர். ஆனால் நீதிபதி, ‘மேய்ச்சலுக்கு எந்த தடையும் வராது’ என்று உறுதி கொடுத்தார்.

நானும், ‘மரங்கள் வளர்த்து காட்ட முடியும்’ என்று நம்பிக்கை கொடுத்தேன். நீதிபதி என்னை பாராட்டி ஊக்கப்படுத்தியதுடன், வனத்துறை வாயிலாக 1,000 மரக்கன்றுகளும், தன் சொந்த செலவில் மின் மோட்டார் மற்றும் குழாய்களும் வாங்கி கொடுத்தார்.

மரக்கன்றுகளை நடவு செய்து முறையாக தண்ணீர் பாய்ச்சியதில், இரு ஆண்டுகளிலேயே வேகமாக, உயரமாக வளர்ந்தன. அதை பார்த்து ஊர் மக்களும் ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தனர். 1996ல் துவங்கி 2004ம் ஆண்டு வரை 10 ஆயிரம் மரங்கள் வளர்த்துள்ளேன்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் திருப்புடைமருதுாரில் துவங்கி, முக்கூடலில் உள்ள முத்துமாலை மாரியம்மன் கோவில் வரை, 3 கி.மீ., நீளத்துக்கு பரந்து விரிந்து இந்த காடு அமைந்துள்ளது. எங்கள் ஊர் மக்கள் இங்கு மேய்ச்சலில் ஈடுபடுவதற்கு வனத்துறையினர் மறுப்பு சொல்வதில்லை. கோடைக் காலத்தில் கூட குளிர்ந்த காற்று வீசுகிறது; எங்கள் ஊரில் மழையும் அதிகமாக பெய்கிறது.

தொடர்புக்கு: 88700 34676.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us