தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ சிற்பங்களை உயிர்த்தெழச் செய்யும் ஓவியங்கள்!

 சிற்பங்களை உயிர்த்தெழச் செய்யும் ஓவியங்கள்!

 சிற்பங்களை உயிர்த்தெழச் செய்யும் ஓவியங்கள்!


PUBLISHED ON : பிப் 20, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2026 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம் முழுதும் கோவில்களில் உள்ள சிற்ப தொகுப்புகளை, கோட்டோவியங்களாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, மதுரையைச் சேர்ந்த, 53 வயதான ஓவியர் ரத்தின பாஸ்கர்:

பள்ளிக்காலம் முதலே ஓவியம் வரைவதில் தனி ஈடுபாடு உண்டு. நிறைய போட்டிகளுக்கு சென்று பரிசு வாங்கி இருக்கிறேன். பட்டப்படிப்பு முடித்ததும், ஓவியத்தையே முதலீடாக வைத்து, ஒரு வடிவமைப்பு கம்பெனியை ஆரம்பித்தேன்.

மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தை சுற்றி நடைபயிற்சி செல்லும்போது, மண்டப சுவர்களில் இருக்கிற ஓவியங்களை பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.

பழமையான ஓவியங்கள் கால ஓட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் சிதைந்து கொண்டே வருகின்றன. அதை எல்லாம் ஓவியங்களாக வரைய நினைத்தேன்.

சில ஓவியங்களை வ ரை ந்து, 'பிரேம்' போட்டு என் அலுவலகத்தில் மாட்டியிருந்தேன். மதுரையை சுற்றிப் பார்க்க வந்த ஒரு வெளிநாட்டுக்காரர் அதை பார்த்து, 'விலைக்கு தருவீர்களா?' என்று கேட்டார்.

எனக்கு விலை கூட சொல்ல தெரியவில்லை. 'நீங்கள் எவ்வளவு தர நினைக்கிறீர்களோ, அந்த தொகையையே தாருங்கள்' என்றேன்.

நான் எதிர்பார்க்காத பெரிய தொகையை தந்தார்; ஆச்சரியமாக இருந்தது. பிறகுதான் அதை தீவிரமாக செய்ய ஆரம்பித்தேன். துணிகளிலும் வரைய ஆரம்பித்தேன்.

ஒருநாள் மீனாட்சியம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதை காரணமாக வைத்து, புதுமண்டபத்தில் இருந்த கடைகளை எல்லாம் காலி செய்தனர்; 12 நாட்கள் மண்டபம் காலியாக கிடந்தது.

நிர்வாக அனுமதியுடன், உள்ளே சென்று அணு அணுவாக ரசித்து புகைப்படங்கள் எடுத்தேன். பிறகு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த சிற்பங்களையும், துாணையும் ஓவியங்களாக வரைய ஆரம்பித்தேன்.

அ வற்றை, 'உளி ஓவியங்கள்' என்று தலைப்பிட்டு, முதல் நுாலாக வெளியிட்டேன். அதே உற்சாகத்தில் புதுமண்டபத்தில், 124 துாண்களிலும் இருக்கிற 750 சிற்பங்களையும் ஓவியங்களாக வரைந்து, 'உளி ஓவியங்கள் - 2' என்று வெளியிட்டேன்.

மீனாட்சியம்மன் கோவிலு க்குள் பாண்டியர்கள், விஜயநகர அரசின் நாயக்கர்கள் என்று, பல கால கட்டங்களை சேர்ந்த சிற்பங்கள் இருக்கின்றன. தொடர்ந்து அனுமதி வாங்கி, அவற்றை புகைப்படங்கள் எடுத்தேன்.

அதை வைத்து, 325 சிற்பங்களை வரைந்தேன். அதுதான், 'மதுரை மீனாட்சி கோவில்' என்ற நுாலாக வந்திருக்கிறது. இந்த நுால்களை எல்லாம் கடன் வாங்கிதான் வெளியிட்டேன்.

இதில் எனக்கு திருப்தியும் சந்தோஷமும் இருக்கிறது. இப்போது ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இந்த நுால்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளேன். இது, எல்லா மொழிகளுக்கும் போய் சேர வேண்டும்.

தொடர்புக்கு:

98433 14049

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us