/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
இந்த நிதியாண்டில் 30 டன் கருப்பட்டி விற்பனைக்கு இலக்கு!
/
இந்த நிதியாண்டில் 30 டன் கருப்பட்டி விற்பனைக்கு இலக்கு!
இந்த நிதியாண்டில் 30 டன் கருப்பட்டி விற்பனைக்கு இலக்கு!
இந்த நிதியாண்டில் 30 டன் கருப்பட்டி விற்பனைக்கு இலக்கு!
PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

கருப்பட்டி மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும், 'பாம் எரா' என்ற நிறுவனத்தின் உரிமையாள ரான, துாத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன்: கடந்த 2021ல், வள்ளியூர் பக்கத்தில் இருக்கும் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் போயிருந்தோம்.
கோவில் பக்கத்து வயல் வரப்பில், 30க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி போட்டிருந்தனர் . ஒரு பனைமரம் வளர, 13 ஆண்டுகள் ஆகும். ஏன் இப்படி வெட்டி அழிக்கின்றனர் என தோன்றியது.
அந்த இடத்துக் காரரிடம் கேட்டபோது, 'வயலில் கடலை போட்டிருக்கேன். வரப்பில் நிற்கிற பனைமரத்தில் இருத்து பனம்பழங்கள் வயலுக்குள் விழுகின்றன. அதை சாப்பிட வரும் காட்டுப் பன்றிகள் நிலக்கடலையை அழித்து விடுவதால், வெட்டினோம்' என்றார்.
அந்த சம்பவம் தான், நான் பார்த்த வேலையை விட்டுவிட்டு, 'பாம் எரா' என்ற நிறுவனத்தை துவங்கியதற்கான விதை.
கருப்பட்டியை சுத்த மாகவும், தரமாகவும் தயாரித்து, 'பிராண்டிங்' பண்ணினால் பெரிய பிசினஸ் வாய்ப்பு இருக்கும் என்றும் புரிந்தது. 'ஆன்லைன்' வணிக நிறுவனமான, 'அமேசான்' வாயிலாக, முதல் மாதமே, 20,000 ரூபாய்க்கு விற்பனை செய்தேன்.
கடந்த, 2022 - 2023ல், 17 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, பாம் எரா நிறுவனம், கருப்பட்டி மற்றும் அது சார்ந்த பொருட்களை தரப்படுத்தி, உலகெங்கும் சந்தைப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கான கருப்பட்டி பவுடர், பனங்கிழங்கு மாவு, 'ரெட் மால்ட்' எனப்படும், 'ஹீமோகுளோபின்' அதிகரிக்கும் பவுடர், கருப்பட்டி மக்ரூன் உட்பட, 10க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறோம்.
அமெரிக்கா, சிங்கப்பூர், அயர்லாந்து , துபாய், ஆஸ்திரேலியா நாடுகளுக்கு ஏற்றுமதியும் நடக்கிறது. 24 பேர் முழு நேரமாக பணியாற்றுகின்றனர்.
தவிர, 100க்கும் மேற்பட்ட பனையேறி களுக்கு நிரந்தர வருமானம் தருகிறோம் . 25,000 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர் . மத்திய அரசு, 10 லட்சம் மானியத்தோடு, 30 லட்சம் ரூபாய் கடன் தந்து, பாம் எரா வளர்ச்சிக்கு உதவியது.
பதநீருக்கு அடுத்து எங்க ஊரில் அதிகம் கிடைப்பது, பனங் கிழங்கு. பனங்கிழங்கில் மாவு செய்து, அதையும் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தோம்.
இட்லி, தோசை, சப்பாத்திக்கான மாவில் இதை இரண்டு கரண்டி சேர்த்தால், ரத்த அழுத்தம், சர்க்கரை கட்டுக்குள் வரும். சுவையும் நன்றாக இருக்கும்.
அடுத்து, துாத்துக்குடியின் அடை யாளமாக இருக்கும் மக்ரூனை கருப்பட்டியில் செய்தோம். இந்த நிதியாண்டில், 30 டன் கருப்பட்டி பொருட்கள் விற்பனையே எங்க இலக்கு.