தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/'13 மாநிலங்களில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் தொழில் நடக்கிறது!'

'13 மாநிலங்களில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் தொழில் நடக்கிறது!'

'13 மாநிலங்களில் 250க்கும் மேற்பட்ட இடங்களில் தொழில் நடக்கிறது!'

2


PUBLISHED ON : அக் 06, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பயணியரை சுற்றுலா அழைத்து சென்று, கூடாரம் அமைத்து தங்கும் வசதிகளை செய்து தரும், 'எக்ஸாட்டிக் கேம்ப்' என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர், சுவாமிநாதன்:

எனக்கு பயணங்கள் மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு பயணத்தில், என்னை போன்று, 'கார்ப்பரேட்' நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் பிரேம்நாத்தை சந்தித்தேன். இருவருமே நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்தோம்.

விடுமுறை வந்தாலே எங்கேயாவது கிளம்பி விடுவோம். ஒருநாள் பயணம் சார்ந்தே ஒரு தொழில் செய்யலாமே என்ற யோசனை வந்தது. பொதுவாக, நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அதிகமாக சந்தித்த பிரச்னை எனில், தங்கும் இடம் தான்.

அதனால், நாங்கள் செல்லும் ஊர்களில் உள்ள நில உரிமையாளர்களிடம் பேசி, அவர்கள் இடத்தில் கூடாரம் அமைத்து தங்குவதற்கு அனுமதி வாங்கி அங்கு தங்குவோம். இயற்கையுடன் நெருக்கமாக இருக்கும் அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

இந்த அனுபவத்தை எல்லாருக்கும் கொடுக்க முடியாதா என்று தோன்றியது. சமூக வலைதளங்களில் ஒன்றான முகநுால் தான் எங்கள் முதல் அலுவலகம்; அங்கிருந்து பயணம் ஆரம்பித்தது.

'இயற்கையுடன் கூடாரம் அமைத்து தங்கும் அனுபவம் வேண்டும் எனில், அதற்கு வாய்ப்பு இருக்கிறது' என்று மக்களிடம் கூறினோம். நாங்கள் இதற்கு முன் கூடாரம் அமைத்து தங்கியிருந்த எல்லா இடங்களுக்கும் சென்று, அந்த நில உரிமையாளர்களை சந்தித்து, 'உங்கள் இடத்தை எங்களுக்கு கொடுங்கள்; பயணியரை அழைத்து வருகிறோம்' என கூறி அனுமதி வாங்கினோம்.

இதன்பின், முகநுால் வாயிலாக இயங்கியதை முழு நிறுவனமாக மாற்றினோம். அதன்பின் தான் எங்கள் வளர்ச்சி இன்னும் வேகமானது. முதலில் நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேரமாக இந்த தொழிலில் இறங்கினேன். தொழில் வேகமெடுக்க ஆரம்பித்ததும், விஜயும் வேலையை விட்டு விட்டார்.

ஆரம்பத்தில், 'நடுக்காட்டில் சென்று தங்குவதா, பாதுகாப்பாக இருக்குமா, குடும்பத்துடன் செல்ல முடியுமா' என, நிறைய கேள்விகளை சுற்றுலா செல்வோர் எங்களிடம் கேட்டனர். இன்றும் அந்த சந்தேகங்கள் சிலரிடம் இருக்கின்றன. நாங்கள் செய்யும் ஏற்பாடுகள் தான் அவர்களுக்கான பதில்!

முதலில் கொடைக்கானலில் தான் தொழிலை ஆரம்பித்தோம். இப்போது இந்தியா முழுதும், 13 மாநிலங்களில் 250க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களை எங்களுடன் இணைத்து தொழில் செய்கிறோம்; சில இடங்களில் நாங்களே நிலம் வாங்கியும் செய்கிறோம். கடந்தாண்டு, 13 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இன்னும் நிறைய மாநிலங்களில் விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us