தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/காதல், தொழில் இரண்டிலும் ஜெயித்த ஜோடி!

காதல், தொழில் இரண்டிலும் ஜெயித்த ஜோடி!

காதல், தொழில் இரண்டிலும் ஜெயித்த ஜோடி!


PUBLISHED ON : அக் 05, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 05, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், பொரித்த சிக்கன் உணவகம் நடத்தி வரும் பிரியா - அஜய் தம்பதி:

* பிரியா: அஜயும், நானும் ஜவுளி துறையில் பட்டப் படிப்பு முடித்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் உண்மையாக விரும்பினோம். ஆனால், இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. நிறைய எதிர்ப்புகளை தாண்டி திருமணம் செய்து கொண்டோம்.

'இருவரும் உருப்படாமல் போகப் போறீங்க' என்று பெற்றோரும், உறவினர்களும் ஏளனம் பேசினர்; எங்களை அலட்சியமாக நினைத்தவர்கள் முன், வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தது.

சொந்தமாக தொழில் செய்து பார்ப்போம் என்று முடிவெடுத்தோம்; அதில் ஜெயித்து, இன்று நன்கு சம்பாதித்து வருகிறோம். இன்னும் அடுத்தடுத்த திட்டங்களும், லட்சியங்களும் இருக்கின்றன.

யாருடைய உதவியும் இல்லை. பண நெருக்கடி, எதிர்காலம் குறித்த குழப்பம், பல கஷ்டங்கள் என, வாழ்க்கை எங்களை மிகவும் சோதித்து பார்த்தது. ஆனாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, கஷ்டமான நாட்களை கடந்து வந்தோம். இருவரில் யாராவது ஒருவர் மனம் உடைந்திருந்தாலோ, இன்னொருத்தர் மனம் தளர்ந்து போயிருந்தாலோ தோற்று போயிருப்போம்.

* அஜய்: என் அப்பா கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நானும் அவருக்கு உதவியாக வேலைகள் செய்திருக்கிறேன். அந்த அனுபவம் இருக்கிறது. ஆனால், நாமும் சிக்கன் கடை வைக்க வேண்டாம். வேறு மாதிரி முயற்சி செய்வோம் என்று, சிக்கன் பொரித்து விற்பனை செய்யும் கடையை ஆரம்பித்தேன். இப்போது வெற்றிகரமாக இரு ஆண்டுகள் ஓடி விட்டன.

இதற்கு துாண்டுகோலாக இருந்தவர் என் மனைவி தான். 'சிக்கன் உணவு எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அதில் இருந்து நாம் வித்தியாசப்படணும்' என்று அவர் தான் கூறினார். என்ன செய்யலாம் என்று யோசித்து, எங்கள் வீட்டு சமையல் அறையையே பரிசோதனை இடமாக மாற்றினோம்.

வெவ்வேறு மசாலாக்கள் கலந்து, தொடர்ந்து சிக்கன் உணவு வகைகளை செய்து பார்த்தபடியே இருந்தோம். அப்படி தான், இப்போது மக்களுக்கு பிடித்திருக்கும் இந்த பொரித்த சிக்கன் வகைகளை உருவாக்கினோம்.

ஆரம்பத்தில் நண்பர்களிடம் சாப்பிடக் கொடுத்து, அவர்களின் கருத்துக்களை கேட்டோம். பல நேரம் நாங்கள் நினைத்ததற்கு எதிராகவே வந்திருக்கின்றன; சமைத்த பொருட்களும் வீணாகின. ஆனாலும், விடாமுயற்சியால் தான் இந்த ருசி, 'செட்' ஆனது.

ஆரம்பத்தில் மாலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை கடை இருக்கும். சிறிது சிறிதாக வாடிக்கையாளர் கூட்டம் அதிகமானதால், நல்ல வருமானம் வர ஆரம்பித்தது. ஒரே ஆண்டில் ஈரோடு மாவட்டம், பவானியில் இன்னொரு கடை ஆரம்பித்தோம். அடுத்து பள்ளிபாளையத்திலும் கடை துவங்குவதற்கான முயற்சியில் இருக்கிறோம். ஒரு கடையில் மாதத்திற்கு, 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us