தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நம்பிக்கையுடன்

முதல் அடி வைத்தால்

வாழ்க்கையே மாறும்!'

கோலம் போடுவதற்கான அச்சுகளை தயாரித்து விற்பனை செய்து வரும், சேலத்தைச் சேர்ந்த வித்யா:

என் அப்பா, தலைமை ஆசிரியர். நாங்கள் மூன்று பெண் குழந்தைகள். நான் பிளஸ் 1 படிக்கும்போது அப்பா இறந்து விட்டார். குடும்பத்தின் துாணாக இருந்தவரை இழந்ததும், வாழ்க்கையே தடம் புரண்ட மாதிரி இருந்தது. அப்பாவின் ஓய்வூதியம் தான் எங்களுக்கு ஆதாரம்.

அம்மா ஒருநாள் கூட தைரியத்தை விடவில்லை. மூன்று பெண்களையும் படிக்க வைத்து, நல்ல நிலைக்கு கொண்டு வரணும் என்ற வைராக்கியத்துடன் போராடினார். நாங்கள் மூவரும் படித்து முடித்தோம்.

திருமணமான சில மாதங்களிலேயே, என் கணவருக்கு உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டது. எங்களுக்கு கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லை. அப்போது எனக்கு குழந்தை பிறந்திருந்ததால், என்னாலும் வேலைக்கு செல்ல முடியாத சூழல்.

கணவர் சிறிது உடல்நிலை தேறி வேலைக்கு செல்ல ஆரம்பித்தார். ஆனால், அவர் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் செய்ய முடியுமா என்று யோசித்தேன்.

எனக்கு கோலம் போடுவது மிகவும் பிடிக்கும். வேலைக்கு செல்லும் தோழியர் பலரும் என் கோலத்தை பார்த்து, 'கோலம் போட ஆசையா இருக்கு. ஆனால் நேரம் தான் இல்லை' என்று கூறுவர். அது தான் எனக்கு தொழில் யோசனையை கொடுத்தது. அம்மா வீட்டில் கோலம் வரைவதற்கான அச்சுகள் நிறைய இருக்கும்.

அவற்றை வைத்து விதவிதமான கோலங்கள் வரைந்து, அதுகுறித்து காணொளிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்ற ஆரம்பித்தேன். அவை, 30 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. அந்த காணொளியை கண்டவர்கள், 'இந்த அச்சுகள் எங்கு கிடைக்கும்?' என்று கேட்க ஆரம்பித்தனர்.

கடனாக, 2,000 ரூபாய் வாங்கி, மொத்த வியாபார கடைகளில் இருந்து அச்சுகளை வாங்கி விற்பனை செய்ய ஆரம்பித்தேன். முதலில் சமூக வலைதளம் வாயிலாக, 'ஆர்டர்'கள் எடுத்தேன். அச்சுகளை வைத்து எப்படியெல்லாம் புதிது புதிதாக கோலங்கள் வரையலாம் என்று வரைந்து காட்டி, அதில் என் தனித்துவத்தை தெரியப்படுத்தினேன். சிறிது சிறிதாக தொழில் வளர ஆரம்பித்தது.

என்னிடம் இப்போது 200க்கும் மேற்பட்ட அச்சு வடிவங்கள் இருக்கின்றன. இப்போது, நானே சொந்தமாக வடிவங்களை உருவாக்க ஆரம்பித்திருக்கிறேன். 'யூ டியூப் சேனல்' மற்றும் கோல அச்சு வியாபாரமும் சேர்த்து மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

Image 1632921

வாழ்க்கை எப்போதும் நமக்கு பிடித்த மாதிரி இருக்காது. ஆனால், நம்பிக்கையுடன் முதல் அடியை எடுத்து வைத்தால், எல்லாமே பிடித்த மாதிரி மாறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us