sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

 வந்தே பாரத் ரயில் பொம்மை!

/

 வந்தே பாரத் ரயில் பொம்மை!

 வந்தே பாரத் ரயில் பொம்மை!

 வந்தே பாரத் ரயில் பொம்மை!


PUBLISHED ON : ஏப் 26, 2026 12:27 AM

Google News

PUBLISHED ON : ஏப் 26, 2026 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரிக் வீல்ஸ்' என்ற பெயரில், குழந்தைகளுக்கான பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வரும், மதுரையைச் சேர்ந்த, 32 வயதான சரவண பவா:

அடிப்படையில், நான் ஒரு பத்திரிகையாளன். மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லுாரியில் இதழியல் படித்து முடித்து, டில்லியில் உள்ள ஆங்கில ஊடகங்களில் வேலை செய்தேன். பின், விற்பனை துறைக்குள் நுழைந்தேன். 2018ல் ஒரு செயலி துவங்குவதற்காக, புட்டோஷி இட்டோ என்ற ஜப்பானியர், இந்தியா வந்திருந்தார்.

அந்த செயலியை விளம்பரப்படுத்துவதற்காக, அவருடன் வேலை பார்த்தேன். என் வேலை அவருக்கு பிடித்துப் போகவே, நாங்கள் இருவரும் இணைந்து, பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை துவங்கி, ஏழு ஆண்டுகள் நடத்தினோம். நல்ல வருமானம் வந்தது.

அதன்பின், பொம்மை தயாரிப்பு தொழிலில் இறங்க முடிவு செய்தோம். இந்தியாவிலேயே பொருட்களை தயாரிக்கணும் என்பதில் உறுதியாக இருந்தோம். அந்த நேரத்தில், என் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தை விளையாட எந்த பொருள் வாங்கினாலும், சீக்கிரமே உடைந்து போகும் தரத்தில் இருந்தது.

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட, 20,000 கோடி ரூபாய் அளவுக்கு பொம்மை வர்த்தகம் நடக்கிறது. இவ்வளவு வணிகம் நடக்கும் ஒரு துறைக்குள், நல்ல தரமான பொம்மைகள் இல்லை. 90 சதவீதம் சீனாவில் இருந்து தான் இறக்குமதி ஆகின்றன. இதை மனதில் வைத்து, 2024 டிசம்பரில் கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் பொம்மைகள் தயாரிக்கும் இடங்களுக்கு சென்று, உற்பத்தி குறித்து தெரிந்து கொண்டோம். பின், பொம்மைகள் தயாரிப்பில் இறங்கினோம்.

எளிதில் உடையாத, கடினமான பிளாஸ்டிக்கில் பொம்மைகள் செய்ய துவங்கினோம். அடுத்து, மக்களுக்கு பரிச்சயமான பொம்மைகளாக இருக்க வேண்டும் என்று யோசித்தோம்.

அந்த நேரத்தில் தான், 'வந்தே பாரத்' ரயில் இந்தியாவில் அறிமுகமானது. அந்த ரயில் இந்தியாவின் தயாரிப்பு என்பதால், அதை பொம்மையாக செய்ய முடிவு எடுத்தோம். இந்த தொழில் மீது இருந்த நம்பிக்கையில் பெரிய முதலீடு போட்டோம். கோவையில் பொருட்களை தயாரித்து, மதுரையில் விற்பனை செய்கிறோம்.

ஒரு பொம்மையின் விலை, 100 ரூபாய் தான். அதை வாங்கி, 1,000 ரூபாய் வரை விற்பனை செய்யும் வியாபாரிகள் எங்களிடம் குறைவான விலைக்குத்தான் கேட்டனர். இதனால், நாங்களே வாடிக்கையாளர்களை தேடி சென்று விற்பனை செய்ய துவங்கினோம்.

 உணவு தொழிலில் சுவையும் சுகாதாரமும் முக்கியம்!

திருச்சி மாவட்டம், காடூரை சேர்ந்த கார்த்தி கேயன் ராஜகோபால்: எனக் கு கடந்த, 2019ல் தி ருமணம் ஆனது, 2020ல் கொரோனா வந்த காலத்தில், பொது முடக்கம் வந்ததால், சென்னையிலிருந்து, மனைவியோடு திருச்சிக்கு வந்துவிட்டேன், எனக்கு சிறு வயதில் இருந்தே, சமையலில் ஆர்வம் அதிகம்.

கொரோனா காலத்தில் கூட, மளிகை கடைகளும், உணவுக் கடைகளும் மூடாமல் செயல்பட்டதை பார்த்து, என்ன சூழல் வந்தாலும், நலிவடையாத தொழில், உணவுத் தொழில் என்பதை உணர்ந்து, 40,000 ரூபாய்க் கு பழைய சிறுரக சரக்கு வாகனம் ஒன்றை வாங்கி, அதில் உணவுக் கடை நடத்துவதற்கு ஏற்றவாறு வாகனத்தை வடிவமைத்தேன்.

அதோடு, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து, தேவையான பொருட்களை வாங்கி, 2021ல், 'திருமுருகன் இட்லி கடை'என்ற பெயரில் தொழிலை தொடங்கினேன், முதல் வாரம் கூட்டமே வரவில்லை.

ஆனால், சுவை நன்றாக இருந்ததால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முதலில் வர ஆரம்பித்தனர். சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததை பார்த்து, பலரும் வர ஆரம்பித்தனர்.

அதோடு, 'ராணுவ வீரர்களுக்கும், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் உணவு இலவசம்' என்று அறிவித்தேன்.

ஒரே மாதத்தில் விற்பனை அதிகரித்தது. இப்போது, மொத்தம், 55 வகையான தோசைகளும், ஐந்து வகையான இட்லிகளையும் கொடுக்கிறோம். எல்லாவற்றுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமையலுக்கு தேவையான மசாலா, மாவு என எல்லாவற்றையும் வீட்டிலேயே அரைத்து எடுத்து வந்துவிடுவோம்; சுவைக்காக செயற்கை நிறங்களோ, ரசாயனங்களையோ சேர்க்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

அப்பாவும், மனைவியும் கடையில் உதவியாக இருக்கின்றனர்.

இரவு மட்டும் தான் கடை என்பதால், மாலை, 6:00 மணிக்கெல்லாம் எங்கள் வாகனத்தில் எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு, கடை நடத்தும் இடத்துக்கு சென்று விடுவோம். இரவு, 7:00 முதல், 11:00 மணி வரை கடை இயங்கும்.

ஐந்து மாதங்களுக்கு முன் என் மனைவியின் சொந்த ஊரான, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும், அதற்கு அடுத்து புனேவிலும் கடையை துவக்கி உள்ளோம்.

ஆரம்ப த்தில் ஏளனமாக பேசியவர்கள் கூட, இப்போது என் வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். உணவுத் தொழிலை பொறுத்த வரையில் சுவையும், சுகாதாரமும் தான் மிக முக்கியம்.

வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், நிரந்தரமாக நம்முடன் இணைந்திருக்கவும், தொடர்ந்து ஒரே மாதிரியான தரத்தை பின்பற்றுவது மிக முக்கியம்.

இப்போது, மூன்று கிளைகளையும் சேர்த்து, மாதம், 3 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்.

நாங்கள் நினைத்ததை விட, வந்தே பாரத் பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக நடக்கும் விற்பனைக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரு நல்ல பொருளை தயாரிக்கிறோம்; அதுவும் நம் நாட்டிலேயே தயாரிக்கிறோம் என்பது எங்களுக்கு மன நிறைவாக இருக்கிறது.

தொடர்புக்கு:

91505 85134






      Dinamalar
      Follow us