/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
'பெல்' நிறுவனத்தின் 12 பிளான்ட்களுக்கு பணிபுரிகிறோம்!
/
'பெல்' நிறுவனத்தின் 12 பிளான்ட்களுக்கு பணிபுரிகிறோம்!
'பெல்' நிறுவனத்தின் 12 பிளான்ட்களுக்கு பணிபுரிகிறோம்!
'பெல்' நிறுவனத்தின் 12 பிளான்ட்களுக்கு பணிபுரிகிறோம்!
PUBLISHED ON : டிச 21, 2024 12:00 AM

திருச்சி, 'பெல்' நிறுவனத்திற்கு இரும்பு பாகங்கள் செய்து கொடுக்கும், பெரமங்கலம் 'வி.பி.ஆர்., இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீசின்' நிறுவனர் இந்திரா: அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அண்ணங்காரன்பேட்டை தான் சொந்த ஊர். வறுமையால் ஏழாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.
சிறு வயதிலேயே தாய்மாமாவை திருமணம் செய்து வைத்தனர். அவர் ஐ.டி.ஐ., படித்து விட்டு, திருச்சியில் ஒரு தனியார் கம்பெனியில் இரும்பு உருக்கும் வேலை பார்த்தார்.
அவருக்கு நரம்பு தளர்ச்சி பிரச்னை வந்ததால், சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை.
இதனால், கணவர் பார்த்த இரும்பு சார்ந்த தொழில் செய்யலாம் என கருதி, திருச்சி என்.ஐ.டி., நடத்திய வெல்டிங் பயிற்சியை முடித்தேன்; இரும்பு தொடர்பான ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்.
அதன்பின், மண்ணச்சநல்லுார் ஐ.ஓ.பி., வங்கியில், 9 லட்சம் ரூபாய் தொழிற்கடன் வாங்கி, பெரமங்கலத்தில் எங்களுக்கு இருந்த இடத்தில், 'வி.பி.ஆர்., இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில் தொழிலை 2008-ல் துவங்கினேன்.
திருச்சியில் உள்ள மத்திய அரசின், 'பெல்' நிறுவனம் சார்பாக கூடங்குளம், ஒடிசா, நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் பவர் பிளான்ட்டுக்காக, 'பீம்' உள்ளிட்ட பாகங்களை செய்து கொடுப்பது தான் எங்கள் வேலை.
இரும்புகளும், டிராயிங்கும் அவர்களே கொடுக்க, அதை எடுத்துச் சென்று, அதேபோல இரும்புகளை வடிவமைத்து, அவர்கள் சொல்லும் இடங்களில் டெலிவரி செய்ய வேண்டும்.
நான் இப்படியெல்லாம் சுழல்வதை பார்த்த பலரும், 'இரும்படிக்கிற இடத்துல, 'ஈ'க்கு என்ன வேலை... ஒரு பொம்பளையால இதெல்லாம் முடியுமா?' என்றனர்.
நான் எதற்கும் கலங்கவில்லை. 25 ஊழியர்கள், 10-க்கு 10 சதுர அடி கட்டடம், லோன் பணத்தில் வெல்டிங், கட்டிங் மிஷின்கள் என்று வாங்கினேன். தொழில் குறித்து தெரிந்தவர்களை வேலைக்கு எடுத்து இரவு, பகலாக உழைத்ததோடு, நானும் கற்றுக்கொண்டேன். நான்கு ஆண்டுகளில் அனைத்து சூட்சுமங்களும் எனக்கு பிடிபட்டன.
எங்கள் நிறுவனத்தின் தொழில் நேர்த்தியை பார்த்து, 'பெல்'லில் இருந்து மாதம், 300 டன் இரும்புகள் வரை வடிவமைப்புக்காக அனுப்பினர்.
ராணிப்பேட்டையில் உள்ள, 'பெல்'லில் இருந்தும் ஆர்டர்கள் வந்ததால், அங்கேயும் எங்கள் கிளையை 2019-ல் துவங்கி, 30 ஊழியர்களை நியமித்து, வேலைகளை இழுத்து போட்டு பார்த்தேன்.
இப்போது, நாடு முழுக்க 12 இடங்களில் நடக்கும், 'பெல்' பவர் பிளான்ட்களுக்கு எங்கள் தயாரிப்புகளை அனுப்பி கொண்டிருக்கிறோம்.

