ADDED : ஜன 20, 2026 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடமலைப்புத்துார் ஊராட்சியில், ஏரி உபரி நீர் வெளியேறும் பகுதியில், ஊராட்சி துாய்மைப் பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பை, வண்டியில் கொண்டு வந்து சாலையோரம் கொட்டப்படுகிறது.
இதை, மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர்.
இதனால், தொழுப்பேடு - -ஒரத்தி மாநில நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், நாய்கள் இப்பகுதியில் உலா வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா.மகேஷ்,
மதுராந்தகம்.

